Header Ads



இலங்கை முஸ்லிம்களின் எதிர்காலம்

ஊடகவியலாளர் மூதூர் முறாசில் எழுதிய முஸ்லிம்களும் சமகாலப் பிரிச்சினைகளும் சில பதிவுகள்' பாகம் - 01 என்ற நூலின் அறிமுக விழா ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியாப் போரத்தின் ஏற்பாட்டில் இம்மாதம் 27 ஆம் திகதி மாலை 4.30 மணியளவில் நாரஹேன்பிட்டிய கிருல வீதி 96, ஆம் இலக்கத்தில் அமைந்துள்ள இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தில் நடைபெறும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் உப தலைவர் அல்ஹாஜ் கலைவாதி கலீல் தலைமையில் நடைபெறும், இந்த நிகழ்வில் இலங்கை முஸ்லிம்களின் எதிர்காலம் என்ற தலைப்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.சுஹைர், உரையாற்றுவார்.

இந் நூலின் முதற் பிரதியை நீதி அமைச்சின் இணைப்புச் செயலாளர் றஹ்மத் மன்சூர், சமூக சேவையாளர் தாஜ்மஹான் ஆகியோர் பெற்றுக்கொள்வர்.

No comments

Powered by Blogger.