தொடர்ந்து இயங்குவோம் - இஹ்வான்கள் சபதம்
(Tn) எகிப்து நீதிமன்றத்தால் தடைவிதிக்க ப்பட்ட முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு, “எகிப்து மக்களுக்கான தனது சேவை தொடரும்” என அறிவித்துள்ளது.
கெய்ரோ நிர்வாக நீதிமன்றம் நேற்று முன்தினம் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் செயற்பாடுகள் அனைத்துக்கும் தடை விதித்ததோடு அதனது சொத்துக்களை முடக்க இடைக்கால அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு எகிப்து சமூகத்தின் ஓர் அங்கம் என்றும் அதன் செயற்பாடுகள் தொடரும் என்றும் சகோரத்துவ அமைப்பு அறிவித்துள்ளது.
“முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு எகிப்து சமூகத்தின் ஓர் அங்கம். ஊழல் மற்றும் அரசியல் நோக்கம் கொண்ட நீதிமன்றத் தீர்ப்பினால் அதனை மாற்றிவிட முடியாது” என்று சகோதரத்துவ அமைப்பு தனது உத்தியோகபூர்வ டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. “இராணுவ சதிப்புரட்சியாளர்கள் தமக்கு எதிரானவர்களை மெளனமாக்க முயற்சிக்கிறார்கள்.
அரசியல் நோக்கம் கொண்ட இந்த தடை உத்தரவு கூட ஒடுக்குமுறை நடவடிக்கையின் ஒரு கட்டமாகும் எவ்வகையான பாசிச செயற்பாடுகளில் ஈடுபட்டபோதும் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு இயங்கும், தொடந்தும் இயங்கும். இந்த தடை உத்தரவு அமைப்புக்கு எந்த வகையிலும் பாதிக்காது” என்று அந்த அறிவிப்பில் மேலும் கூறப் பட்டுள்ளது.

Post a Comment