Header Ads



சாய்ந்தமருது முபாறக் டெக்ஸ்டயில்ஸ் தவிசாளரின், முன்மாதிரியான சேவைக்கு பாராட்டு

(ஏ.எல்.ஜுனைதீன்)

  சாய்ந்தமருது வைத்தியசாலை வீதியின் முகப்பில் கடந்த சில வருடங்களாக்க் குப்பை கூழங்கள் போடப்பட்டு வந்ததை இல்லாமல் செய்து அதனை வேறு ஒரு வழியில் தடுப்பதற்கு இவ்வூர் தனவந்தர் ஒருவர் வெற்றிகரமாக நடவடிக்கை எடுத்துப் பொது மக்களின் பாராட்டைப் பெற்றுள்ளார்.

  அதற்காக சாய்ந்தமருது சிரேஷட பிரஜைகள் அமைப்பின் சார்பாக அல்-ஹாஜ் டாக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல்  அவருக்கு நன்றி தெரிவித்து கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார்

 தனவந்தருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது ' கல்முனை மாநகர சபை, சுகாதார திணைக்களம் மற்றும் சட்டம், ஒழுங்கு பேணுதலுக்குப் பொறுப்பானவர்கள் இதனை நிறுத்துவதற்கு அக்கறை காட்டாது அல்லது திராணியற்றவர்களாக இருந்த நிலையில் தங்களின்  தனிப்பட்ட ஆளுமையும் அர்ப்பணிப்பும் போற்றத்தக்கது. எல்லாம் வல்ல அல்லாஹ்விடமும் தங்களுக்கு நற்கூலி உண்டு'  எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சாய்ந்தமருது முபாறக் டெக்ஸ்டயில்ஸ் குறுப் தவிசாளர் அல்-ஹாஜ்- எம்.எஸ்.எம். முபாறக் அவர்களே அந்த சமுகப்பொறுப்புள்ள தனவந்தராவார். பொது மக்களும் அவரைப் பாராட்டியிருக்கிறார்கள்.

No comments

Powered by Blogger.