Header Ads



ரணில் விக்ரமசிங்கவுடன் விவாதத்திற்கு வருமாறு மகிந்த ராஜபக்ஷவுக்கு சவால்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக்கு அரசாங்கம் அஞ்சுவதாகவும் முடிந்தால் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் விவாதம் ஒன்றுக்கு வருமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு சவால் விடுப்பதாக மத்திய மாகாணத்திற்கு தெரிவாகியுள்ள அசாத் சாலி தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார்.  அவர் மேலும் தெரிவிக்கையில்,

சுதந்திரம் மற்றும் நீதியான தேர்தல் மூலம் அரசாங்கம், மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெறவில்லை.

இலக்க தகடுகள் இல்லாத பல வாகனங்கள் கண்டியில் சுற்றித் திரித்தன. ஆனால் அவற்றுக்கு எதிராக சட்டம் செயற்படுத்தப்படவில்லை. பொலிஸ் மா அதிபரும், தேர்தல் ஆணையாளரும் வேலை தெரியாத டாசன்களின் நிலைமைக்கு ஆளாகியுள்ளனர்.

அரச ஊடகங்கள் பக்கச்சார்பாக நடந்து கொண்டன. இந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்குகளை கவர்ந்து சரத் பொன்சேகா மூன்றாமிடத்திற்கு வந்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவுடன் சரத் பொன்சேகாவுக்கு போட்டியிட முடியாது. 2005 ஆம் ஆண்டில் ரணில் விக்ரமசிங்க பெற்ற வாக்குகளை கூட 2010 ஆம் ஆண்டு தேர்தலில் சரத் பொன்சேகாவினால் பெறமுடியாது போனது.

2010 ஆம் ஆண்டு சரத் பொன்சேகாவை ஜனாதிபதி தேர்தலில் ஆதரித்தது ஐக்கிய தேசியக்கட்சி செய்த தவறு.

அதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், கிழக்கு மாகாணத்திற்கு சென்று பொய்களை கூறி அங்குள்ள முஸ்லிம்களை ஏமாற்றி மீண்டும் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டது போல இம்முறையும் அரசாங்கத்துடன் இணைந்தே செயற்படுவார் என்றார்.

No comments

Powered by Blogger.