Header Ads



பணத்தைவிட மக்களுடைய கருத்து பலம் வாய்ந்தது - தயாசிறி

ஐக்கிய தேசிய கட்சி சரிவு நிலையை சந்தித்துள்ளதாக, மாகாண சபை தேர்தல் வரலாற்றில் அதிக விரும்பு வாக்குகளை பெற்றுக்கொண்ட தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். குருநாகலில் 23-09-2013 இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்ட 37 பேரின் மொத்த வாக்குகளை விட, தாம் தனியே அதிக வாக்குகளை பெற்றுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது முக்கியமான வெற்றியாக கருதுகின்றோம். வேட்பாளர்கள் எதிர்காலத்தையாவது தெரிந்து கொள்ள வேண்டும் பணத்தால் இவை அனைத்தையும் அளவிட முடியாது என்று. மக்களுடைய கருத்து அதனைவிட பலம் வாய்ந்தது என நாம் அனைவரும் மனதில் கொள்ள வேண்டும். குருநாகல் மக்கள் நல்லபாடத்தை புகட்டியுள்ளார்கள்.

இது ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசிய கட்சி அழித்த மற்றும் எங்களுக்கு சேறு பூசியவர்கள் எதிர்நோக்கிய தோல்வி என்றே நான் கருதுகிறேன். ஐக்கிய தேசிய கட்சியின் 37 உறுப்பினர்கள் இணைந்து 1 லட்சத்து 65 ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற்றனர். தனியொருவரான எனக்கு 3 லட்சத்து 36 ஆயிரம் வாக்குகளை பெறக்கூடியதாக இருந்தது. பொதுவாக எந்த தேர்தலின் பின்னரும் தமக்கு சிறிய பின்னடைவு ஏற்பட்டதாக கூறுவார்கள். இது சிறிய பின்னடைவு அல்ல. இது பாரிய வீழ்ச்சி. இதனை அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

No comments

Powered by Blogger.