Header Ads



இலங்கையில் முதல் தடவையாக தனியார் பஸ்களில் பெண்கள் நடத்துநராக நியமனம்

(Tm) இலங்கையில் முதல் தடவையாக தனியார் பஸ்களில் பெண்களை நடத்துநராக நியமிக்க வட மத்திய மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தீர்மானித்துள்ளது.

இதன் அடிப்படையில் இந்த வேலையை ஏற்க முன்வந்த 48 வயதான ஆர்.சிரிமாவதி எனும் பெண் ஹொறவபொத்தனை-வஹல்கட பஸ்ஸில் நடத்துநராக பணிபுரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

சிரிமாவதி சமர்ப்பித்த விண்ணப்பத்தை பார்வையிட்ட போக்குவரத்து அதிகார சபை இவருக்கு வாய்ப்பு அளித்து நடத்துநர் அனுமதிப்பத்திரத்தையும் வழங்கியுள்ளது.

வடமத்திய மாகாண போக்குவரத்து அமைச்சர் எச்.பி.சீமசிங்கவின் அங்கிகாரத்துடன் பெண்களை பஸ் நடத்துநராக நியமனம் செய்தலை தொடங்கியுள்ளதாக வட மத்திய போக்குவரத்து அதிகார சபையின் பொது முகாமையாளர் கூறினார்.

1 comment:

  1. நாடு உருப்பட்டமாதிரித்தான்,

    ReplyDelete

Powered by Blogger.