Header Ads



கண்டியிலும் முஸ்லிம் பிரதிநிதித்துவங்கள் இழப்பு

(Hafeez)

நடந்துமுடிந்த மத்திய மாகாண சபைத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்ட முன்னாள் மாகாண சபை முஸ்லிம் அங்கத்தவர்கள் நால்வர் படுதோல்வியடைந்துள்ளனர்.

மேற்படி அங்கத்தவர்கள் மூவரில் இருவர் முன்னாள் மாகாண சபையில் ஐ.தே.க. சபார்பாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றுஅரசின் பக்கம் சாய்ந்தவர்கள். முற்றவர் முன்னுரிமை அடிப்படையில் சிரிது காலத்தின் பின் வெற்றிட மேற்பட்ட போது  தெரிவானவர்.

அதாவது பிரதி அமைச்சர் ஏ.ஆர்.எம்.அப்துல் காதர் அவர்களது மருமகன் எம்.ஆர்.எம். ஹம்சாத் ஏற்கனவே ஐ.தே.க. சார்பாகப் போட்டி இட்டு இம்முறை மாமனாருடன் கட்சி தாவியவர்.

மற்றவர் ஐ.தே.க. பட்டியலில் ஸ்ரீல.மு.கா. சார்பாகப் போட்டியிட்ட எஸ்.எம்.எம்.மர்ஜான் இம் முறை ஐ.மு.சு.கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார்.

சகலரதும் எதிர் பார்ப்பை பெற்றிருந்த ரிஸ்வி பாரூக் சென்ற முறையும் ஐ.மு.சு.கூட்டணியுடன் போட்டியிட்டு முன் உரிமை அடிப்படையில் பிற்பட்ட காலத்தில் தெரிவானார். அவரும் சுமார் 16 000 ற்கும் மேற்பட்ட விருப்பு வாக்குகளைப் பெற்றும் தோல்வியைத் தழுவியுள்ளார்.

இது தவிர முன்னாள் அங்கத்தவரும் கடந்த நான்கு மாகாண சபைகளிலும் ஐ.தே.க. அங்கத்தவராக தொடர்ந்து இருந்ததுடன் ஒரு முறை மாகாண அமைச்சராகவும் இருந்த எம்.எஸ்.எம்.சாபி ஹாஜியார் உம் தோல்வி அடைந்துள்ளார்.

கடந்த மாகாண சபையில் ஐ.தே.க. சார்பாகப் போட்டியிட்ட செய்னுள் ஆப்தீன் லாபிர் ஹாஜியார் மட்டும் இம்முறை தனது இருப்பைத் தக்கவைத்துக் கொண்டார்.

3 comments:

  1. இவர்களின் தன்னல சேவைதான் இவர்களை மக்கள் புறக்கனித்துள்ளார்கள் இதில் சிலர் ஒரு தேர்தல் வருகிறது என்பதற்காக குரல் மட்டும் எழுப்பியவர்கள் இனி வரும் காலங்களில் அரசியலில் முஸ்லிம்கள் மத்தியில் பாரிய மாற்றங்கள் நிகழப்போகிறது என்பதற்கு இவர்களின் தோல்வி எடுத்துக்காட்டு.

    ReplyDelete
  2. IF WE SELECT THESE DOLL WHAT THEY WILL DO THAT IS WHY WE KEPT THEM IN SHOP, MUSLIM UMMAN NEED TO WAKE UP MORE

    ReplyDelete
  3. சுய நல அரசியல் வியாபாரிகளுக்கு மக்கள் வழங்கிய முதல் அடி, மக்கள் சிந்தித்தால் சமூக நலன் விரும்பும் அரசியல் வாதிகளை தெரிவு செய்யலாம், மக்களும் சிந்திக்கட்டும் அரசியல் வாதிகளும் சிந்திக்கட்டும்

    ReplyDelete

Powered by Blogger.