Header Ads



ஐக்கிய தேசியக் கட்சி தலைமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

(Nf) மூன்று மாகாண சபைகளினதும் தேர்தல் முடிவுகள் வெளியானதன் பின்னர், சிறிகொத்தாவில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி தலைமை அலுவலகத்தின் முன்பாக சிலர் ஒன்றுகூடி எதிர்ப்பை வெளியிட்டனர்.

இந்த நிலைமையை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்காதவிடத்து, இந்த எதிர்ப்பு சாகும் வரையான உண்ணாவிரத போராட்டமாக மாறும் என அவர்கள் குறிப்பிட்டனர்.

தொடர்ச்சியாக ஐக்கிய தேசியக் கட்சி அடைந்துவரும் தோல்வி குறித்து இதன் பிறகும் அமைதியாக இருக்க முடியாது என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

இதேவேளை, மாகாண சபை தேர்தல் தோல்விக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், செயலாளர் உள்ளிட்ட செயற்குழுவே பொறுப்புகூற வேண்டுமெனவும், இதற்காக பொதுமக்கள் ஒருபோதும் அவர்களுக்கு மன்னிப்பு வழங்க மாட்டார்கள் எனவும் ஐக்கிய பிக்குகள் முன்னணி அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.