Header Ads



வட மாகாணத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு 3 ஆசனங்கள் - றிப்கான பதியுதீன்

வடமாகாண சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு 3 ஆசனங்கள் கிடைத்துள்ளதாகவும், வடமாகாணத்திலேயே மன்னார் மாவட்டத்தில்தான் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு விகிதாசார அடிப்படையில் 28.8 வாக்குகள் கிடைத்திருப்பதாகவும் றிப்கான பதியுதீன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது;

அகில இலங்கை மக்கள் முஸ்லிம் காங்கிரஸ்  சார்பில் வவுனியாவில் போட்டியிட்ட வன்னிநாயக்கா ஐயதிலக்க என்பவரும் முல்லைத்தீவில் மொஹமட் லெப்பை ஐனுவரும், மன்னாரில் நானும் வெற்றி பெற்றுள்ளோம். வெற்றிபெற்ற வன்னிநாயக்கா ஐயதிலக்க அமைச்சுர் றிசாத் பதியுதீனின் இணைப்பாளராக 11 வருடங்கள் பணியாற்றியவர். ஐனுவரும் முல்லைத்தீவு மக்களுக்கு ஏற்கனவே பரீட்சயமானவர்.

தமிழ் இனவாத ஊடகங்கள் எங்களுக்கு எதிராரக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டன. ஆலயங்களில் இருக்கவேண்டிய மதகுருமார் வீதிகளில் நின்று அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிராக மக்களை தவறாக வழிநடத்தினர். அமைச்சர் றிசாத் பதியுதீன் தேர்தலின் பின்னர் முடக்கப்படுவாரென செல்வம் அடைக்கலநாதன் பகிரங்கமாக அச்சுறுத்தினார். முஸ்லிம் அமைப்பொன்றும் எமக்கு எதிராக பிரச்சாரம் செய்தது

இந்த பிரச்சாரங்களுக்கு எல்லாம் அப்பால்சென்று மக்கள் எங்களுக்கு வாக்களித்தனர். இது எமக்கு கிடைத்த அங்கீகாரம். எமது அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு கிடைத்த பெருவெற்றி. வடக்கு மக்களுக்கு எமது சேவை தொடரப்படும். அதற்காகவே மக்கள் எமக்கு வாக்களித்துள்ளனர். அதனால்தான 3 பிரதிநிதித்துவத்தை எமது கட்சி பெற்றுள்ளது.

எமது கட்சியில் சார்பில் தோல்வியடைந்த வேட்பாளர்களையும் நாம் அபிவிருத்தி நடவடிக்கையில் இணைக்கவுள்ளோம். இதுவோர் புரட்சி. மக்களுக்கு சேவை புரிவதே எமது நோக்கம். அமைச்சர் றிசாத் பதியுதீன் கரங்களை பலப்படுத்தியபடி எமது பணிகள் தொடரும்.

 அத்துடன் எமக்கு வாக்களித்த சகலருக்கும், எமது கட்சி சார்பிலும், அமைச்சர் றிசாத் பதியுதீன் சார்பிலும் நன்றிகளை தெரிவிக்கிறோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

2 comments:

  1. அமையப் போகும் ''தனி ஈழத் தமிழ் மாகாணத்தில்'' அல்லது ''தமிழீழத் தனி மாகாணத்தில்'' எதிர்க்கட்சியாக இருந்து நீங்கள் ஆற்ற வேண்டிய வரலாற்றுக் கடமைகள் நிறைய இருக்கிறது. முன்னரை விட அதிக சக்தியுடனும் பொறுப்புணர்வுடனும் மக்களுக்கான சேவைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். சாமர்த்தியத்துடனும் சாணக்கியத்துடனும் நேர்மையான அரசியல் பணியை தமிழ் பேசும் மக்களுக்காக நீங்கள் நிச்சயம் ஆற்றுவீர்கள் என்று நம்புகிறோம். கறைபடாத கரங்களுக்கும் நெறிபிறழா நெஞ்சத்துக்கும் சொந்தக்காரரான தங்கள் சகோதரர் மாண்புமிகு அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு தங்களின் அரசியல் சேவைகள் மூலம் மேலும் சிறப்புச் சேர்க்க வேண்டுமென உளமார வாழ்த்துகிறோம்!

    அல்லாஹு அக்பர்!

    எஸ்.ஹமீத்

    ReplyDelete
  2. வட மாகாணத்தில் வெற்றிலைக் கட்சி பெற்றது 07 ஆசனங்கள். அதில் அமைச்சர் றிசாதின் கட்சிக்கு 03 ஆசனங்கள் என்றால் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான சுதந்திரக்கட்சியும், ஏனைய கூட்டுக்கட்சிகளுமாகச் சேர்ந்து 04 ஆசனங்களைத்தான் பெற்றுள்ளது என்பது தெளிவாகின்றது.

    ஆக, மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான இந்த கூட்டு அரசாங்கமானது வட மாகாண சபைத் தேர்தலில் மிகவும் மோசமான படுதோல்வியை அடைந்துள்ளது என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறீர்கள். உங்களின் புள்ளி விவரங்களுக்கு மிக்க நன்றி!

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete

Powered by Blogger.