Header Ads



யாழ்ப்பாணத்தில் விருப்பு வாக்கு பெற்றவர்கள் விபரம் - விக்னேஸ்வரனுக்கு 132,255 வாக்குகள்

(Tm) இலங்கை தமிழரசுக் கட்சியின் வட மாகாண முதலமைச்சர் வேட்பாளரான ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் 132,255 அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார்.

யாழ். மாவட்டத்தில் இருந்து வட மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் விருப்பு வாக்குகள் மாவட்ட செயலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சியின் சார்பாக சி.வி.விக்னேஸ்வரன் 132,255 அதிகூடிய விருப்பு வாக்குகளையும் அனந்தி சசிதரன் 87,870 விருப்பு வாக்குகளையும் தர்மலிங்கம் சித்தார்த்தன் 39,715 விருப்பு வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

அத்துடன் பாலச்சந்திரன் கஜதீபன் 29,669 விருப்பு வாக்குகளையும் இ.ஆர்னோல்ட் 26,888 விருப்பு வாக்குகளையும் கந்தையா சிவஞானம் 26,747 விருப்பு வாக்குகளையும் எம்.கே.சிவாஜிலிங்கம் 22,660 விருப்பு வாக்குகளையும் ஐங்கரநேசன் பொன்னுத்துரை 22,268 விருப்பு வாக்குகளையும் எஸ்.சுகிர்தன் 20,541 விருப்பு வாக்குகளையும் கே.சயந்தன் 20,179 விருப்பு வாக்குகளையும்  விந்தன் கனகரத்தினம் 16,463  விருப்பு வாக்குகளையும் ஏ.பரம்சோதி 16,359 விருப்பு வாக்குகளையும் கந்தையா சர்வேஸ்வரன் 14,761 விருப்பு வாக்குகளையும் வி.சிவநேசன் 13,479 விருப்பு வாக்குகளையும் பெற்றுள்ளனர்.'

இதேவேளை, ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் கமலலேந்திரன் 13,632 விருப்பு வாக்குகளையும், அங்கஜன் இராமநாதன் 10,034 வாக்குகளையும் பெற்றுள்ளனர். 

4 comments:

  1. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
    பெருமையாக அதே நேரம் ரொம்ப சந்தோஷமாகவும் இருக்கிறது.

    ஒரு பெண் வேட்பாளருக்கு இந்த அளவு அச்சுறுத்தல் இருந்தும் அவரின் கடின உழைப்பு மட்டும் மக்கள் தேசியத்தின் மீது வைத்து இருந்த உணர்வும் தெளிவாக இருக்கிறது. இருக்கும் வளம் &அடாவடிதனம் செய்தும் ஒரு ஆணியும் புடுங்க முடியவில்லை. சிலருக்கு நல்ல ஒரு பாடம் சொல்லப்பட்டு இருக்கிறது.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்,தமிழ் மக்கள் சரியான முடிவை எடுத்துள்ளார்கள். மீண்டும் அங்கு ஜனநாயகம் மலரட்டும்

    ReplyDelete
  3. நீங்கள் வட மாகாண சபையில் முதலமைச்சராகப் பதவி வகித்தாலும் அங்கும் ஒரு நீதி வழுவாத நீதியரசராகவே இருப்பீர்கள் என்கிற பெரும் நம்பிக்கை எனக்குள்ளது.

    இலங்கையில் படுமோசமாகச் சீர்கெட்டுப் போயுள்ள இன்றைய 'பணம் உழைக்கும்' அரசியல் கலாச்சாரமானது, நாட்டின் 'தலை'யெனக் கருதப்படும் வட புலத்திலிருந்து முற்றாகவும், முன்னுதாரணமாகவும் தங்களது ஆட்சிக்காலத்தில் மறுசீரமைக்கப்பட்டு, மக்களினதும், தாய் நாட்டினதும் நலன்களுக்கு முன்னுரிமையளிக்கும் 'சமூக அரசியல்' முன்னெடுக்கப்பட வேண்டும் எனப் பிராத்தித்தவனாக எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  4. ஐயா புவி ரஹ்மத்துல்லாஹ்.....நான் ஒரு யாழ்பாண தமிழன் ...உங்கள் பின்னூடங்களை தவறாமல் படித்து வருகிறேன் .......சில வேளைகளில் உங்கள் பின்நூடதிட்காகவே jaffna முஸ்லிம் செய்தியை படிப்பதுண்டு.. நல்ல நிதானமாக பக்கசார்ப்பில்லாமல் நினைத்ததை பொருத்தமான தருணத்தில் அப்படியே போட்டு உடைத்து விடுகிறீர்கள் ......வாழ்த்துக்கள்..நன்றியுடன் உங்கள் கரங்களை பற்றி கொள்கிறேன்.....நீங்கள் சொல்வது சரி.... தமிழர்கள் யார் என்ன உதவி செய்தாலும் இரண்டு கைகளாலும் வாங்குவார்கள் ..தேர்தல் வரும் போது தாம் விரும்பும் பொருத்தமானவர்களுக்கே வாக்களிப்பார்கள்.....அது இனவாதமா? அல்லது பகுத்தறிவா தே ரியவில்லை.....நீங்கள் என்ன நினைகிறீர்கள்???///

    ReplyDelete

Powered by Blogger.