கல்முனை KDMC நெனசலவுக்கு சுவர்ண விருது
(யு.எல்.எம். றியாஸ்)
கல்முனை KDMC நெனசல அம்பாறை மாவட்டத்திற்கான சிறந்த நெனசலவிர்கான 2013ம் ஆண்டின் சுவர்ண விருதினை பெற்றுள்ளது. தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பத்தின்மூலம் இலங்கை மக்களை வலுப்படுத்தும் நோக்கத்துடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் தலைமத்துவத்தினதும்,வழினடத்ததிலினதும் அடிப்படையில் அமுல் படுத்தப்பட்ட நெனசல அறிவக செயல்திட்டங்களின் முன்னோடிகளை தேசிய மட்டத்தில் பாராட்டும் அறிவக அங்கீகார சுவர்ண விருது விழா கல்கிஸ்ஸ விடுதியில் இடம்பெற்றது.
இவ்விழாவிற்கு பிரதம அதிதியாக தகவல் தொழில் நுட்ப மற்றும் தொலைத்
தொடர்பாடல் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய பிரதம அதிதியாக கலந்துகொண்டு விருதுகளை வழங்கி வைத்தார், இவ்விழாவில் அம்பாறை மாவட்டத்தின் சிறந்த நெனசலவிர்கான 2013ம் ஆண்டின் சுவர்ண விருதினை கல்முனை KDMC நெனசலவிர்கான பணிப்பாளர் எஸ்,எம்,ஹாஜா பெற்றுக்கொண்டார்.


Post a Comment