Header Ads



சிரியாவில் ஆயுதக்கிடங்கு வெடித்தது - 40 பேர் மரணம், 120 பேர் காயம்

சிரியாவில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள மாவட்டங்களில் கிளர்ச்சியாளர்கள் வியாழக்கிழமை ஏவுகணை தாக்குதல் நடத்தினர். ஆயுதக் கிடங்கிலும் சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த குண்டுவெடிப்பில் 40 பேர் உயிரிழந்தனர். 120-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று பிரட்டனைச் சேர்ந்த சிரியாவுக்கான மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

மத்திய சிரியாவின் நகரமான ஹாம்ஸ் நகரில் உள்ள ஆயுதக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த குண்டுகள் வெடித்து சிதறின. இதில் ஆயுதக் கிடங்கின் கட்டடம் தரைமட்டமானது. 

ஆயுதக் கிடங்கின் அருகில் இருந்த பல வீடுகள் இடிந்தன. இன்னும் பல வீடுகள் பலத்த சேதம் அடைந்தன. சுவர்களில் பெரிய வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. அந்தப் பகுதியில் அதிபர் பஷார் ஆஸாத் ஆதரவாளர்கள்தான் அதிகளவில் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.