திருமண பரிசாக கிட்னி
பிரிட்டனில், காதல் திருமணம் செய்த பெண், தன் கணவருக்கு, கிட்னியை திருமண பரிசாக வழங்குவதாக அறிவித்து உள்ளார். பிரிட்டனை சேர்ந்தவர், லீசா பார்சல்,வயது 27. தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரியும் லீசா, தன் நீண்ட நாள் காதலனான, லீ பார்சலை கடந்த மாதம் திருமணம் செய்தார். 13 ஆண்டுகளாக இருவரும் காதலித்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன், லீ பார்சலின் உடல்நிலை மோசமானது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, கிட்னி செயல் இழந்தது.
அதன் பின், டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்த லீ, மீண்டும் நோய்வாய்பட்டார். அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், லீயின், இரண்டாவது கிட்னியும் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தனர். இந்நிலையில், கடந்த மாதம், லீ பார்சலின் உடல்நிலை மோசமானது. இதையடுத்து, இருவரும் அவசரமாக திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு முன்னரே, காதலரின் சிறுநீரகம் செயல் இழந்த விவரம் தெரிந்தும், லீசா பார்சல் அவரை முழு சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். அதன்பின், இம்மாத இறுதியில், லீ பார்சலுக்கு மாற்று சிறுநீரகம் பொருத்த, டாக்டர்கள் திட்டமிட்டு உள்ளனர். தன்னுடைய சிறுநீரகத்தை, காதல் கணவருக்கு வழங்க, மனைவி லீசா, முன் வந்துள்ளார். "இதை விட பெரிய திருமணப் பரிசை நான் தரமுடியாது' என, லீசா பெருமையுடன் கூறியுள்ளார்.
.jpg)
Post a Comment