ஆப்கானிஸ்தானில் பெண் எம்.பி.யை கடத்திச்சென்ற தலிபான்கள்
ஆப்கானிஸ்தான் பெண் எம்.பி.ஆக இருப்பவர் பரிபா அகமதி ககார். நேற்று இவர் காபூல் அருகேயுள்ள ஷாஷினி மாகாணத்தில் கிராம பகுதியில் காரில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவருடன் 3 மகள்களும் உடன் இருந்தனர். அப்போது, காரை வழிமறித்த தலிபான்கள் அவர்களை கடத்தி சென்றனர்.
தகவல் அறிந்ததும் நேட்டோ படையினரும், ஆப்கானிஸ்தான் உளவுத் துறையினரும் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து அவரது 3 மகள்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
ஆனால், எம்.பி. ககாரை மட்டும் அவர்கள் ஒரு மறை விடத்தில் அடைத்து வைத்துள்ளனர். சிறையில் இருக்கும் 4 தலிபான்களை விடுவித்தால் கடத்தப்பட்டிருக்கும் பெண் எம்.பி.யை விடுதலை செய்வோம் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
.jpg)
Post a Comment