யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலேயே வாக்குகள் எண்ணப்படும்
வடமாகாண சபைத் தேர்தலின் பின்னராக வாக்கு எண்ணும் நிலையமாக யாழ். மத்தியகல்லூரி தெரிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ்.அரச அதிபர் அறிவித்துள்ளார். யாழ். செயலகத்தில் இன்று 02-08-2013 காலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்அறிவிப்பு விடுக்கப்பட்டது.
இம்முறை வாக்குகள் யாழ். செயலகத்தில் வைத்து எண்ணப்படமாட்டாது என்றும் இதுகுறித்து இடம் நிர்ணயிக்கப்பட வில்லை என்றும் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டநிலையில் யாழ். மத்திய கல்லூரியில் வாக்குகள் எண்ணப்படும் என யாழ். தேர்தல்தெரிவத்தாட்சி அலுவலரும் யாழ். அரச அதிபருமான சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். யாழ்.மத்திய கல்லூரியில் அதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் யாழ்.அரச அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்

வாக்குகள் எங்கு எண்ணப்பட்டாலும் பிரச்சினையில்லை. ஆனால் கட்சிகள்தான் தங்களது வாக்கெண்ணும் முகவர்களை விவரமுள்ளவர்களாக நியமிக்க வேண்டும்.
ReplyDeleteமுன்னதாக சகல வாக்களிப்பு நலையங்களிலும் வாக்களிப்பு முகவர்களை கட்சிகள் நியமித்து உரிய வேளைக்கு அந்தந்த வாக்களிப்பு நிலையங்களில் பிரசன்னமாகச் செய்ய வேண்டும்.
ஒவ்வொரு வாக்களிப்பு நிலையத்திலும் வாக்களிப்பு முடிந்தவுடன் கட்சிகளின் முகவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குச் சீட்டுக்கள் பற்றிய விவரம் அந்த வாக்களிப்பு நிலைய பிரதம உத்தியோகத்தரால் உறுதிப்படுத்தி வழங்கப்படும்.
மாலை 4- 5 மணிக்குள்ளாக இந்த வாக்களிப்பு நிலைய அறிக்கைகளை கட்சியின் மத்திய நிலையம் ஒன்றிணைக்கும்போது, அந்ததந்த மாவட்டத்தில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை தெரிந்து விடும்.
பின்னர் வாக்கெண்ணும் நிலையத்திலும் வாக்குப் பெட்டிகள் உடைக்கப்பட முதல் இந்த வாக்களிப்பு நிலையம், இத்தனை வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன என்ற விபரம் தெரிவிக்கப்படும்.
அதன்போதும் குறித்த வாக்களிப்பு நிலைய முகவர் தந்துள்ள வாக்களிப்பு எண்ணிக்கையை வாக்கெண்ணும் நிலைய முகவர் உறுதிப்படுத்திக் கொள்ள முடீயும்.
இப்போது வாக்கெண்ணும் நிலையத்தினால் மாவட்டத்தில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் எத்தனை என்று அறிவிக்கும்போது, கட்சிகள் தம்மிடமுள்ள வாக்களிப்பு நிலையத்தில் அளிக்கப்பட்ட அறிக்கைகளின் கூட்டுத்தொகைக்கு வித்தியாசமாக அத்தொகை இருக்குமாயின் நீதிமன்றத்தில் வழக்காடியேனும் அத்தேர்தல் முடிவுகளை இரத்துச் செய்யலாம்.
கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலின்போது நான் பெற்றுக்கொண்ட அனுபவத்தையே சுட்டிக்காட்டுகின்றேன்.
கி.மா. தேர்தலில் த.தே.கூட்டமைப்பு தமிழ்ப் பகுதிகளில் அமைந்திருந்த எல்லா வாக்களிப்பு நிலையங்களுக்கும் முகவர்களை நியமித்திருக்கவில்லை. நியமிக்கப்பட்ட முகவர்களும் அச்சுறுத்தல்கள், அடாவடித்தனங்கள் காரணமாக அங்கு செல்லவில்லை. அல்லது தொடர்ந்து மாலை வரை இருக்கவில்லை.
அதனால் மட்டக்களப்பு மாவட்ட வாக்களிப்பில் 4000 வாக்குகளை கடைசி நேரத்தில் மாற்றி மாவட்ட முடிவுகளையும், மாகாண முடிவுகளையும் தலைகீழாக மாற்றிவிட்டனர்.
இதுபற்றி நான் பல தடவை தேசிய, பிராந்திய ஊடகங்களிலும் இணையதளங்களிலும் ஆக்கங்களை எழுதியுள்ளேன். இன்றும் அதே 4000 வாக்குகளை அரசு தில்லுமுல்லுச் செய்து கொள்ளையடித்துக் கொண்டது என்பதுதான் எனது நம்பிக்கை. எனக்கெதிராக எந்தவொரு சட்ட நடவடிக்கையையும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரோ, தேர்தல் ஆணையாளரோ இதுவரை எடுக்கவில்லை.
நள்ளிரவு 1:00 - 1:30 வரை ஆளம் ஐ.ம.சு.முன்னணியில் றிஷாட் பதியுதீனின் கட்சியைச் சேர்ந்த அமீரலிதான் முன்னணியில் இருந்தார். முன்னாள் கி.மா. அமைச்சர் பிள்ளையான் தெரிவு வாக்கில் படுதோல்வியடைந்து வின்சென்ட் மகளிர் கல்லூரி வாக்கெண்ணும் நிலையத்தில் இருந்தே வெளியேறியிருந்தார். இந்நிலையில் அதிகாலை அறிவிக்கப்பட்ட முடிவின்போது பிள்ளையான் முதலாவது இடத்திற்கு வந்திருந்தார். இது எப்படி முடியும்..?
அதேநேரம் பிள்ளையானின் கட்சியில் நிறுத்தப்பட்டிருந்தவர்களில் அவர் மாத்திரம்தான் அதிகப்படியான விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தாரே தவிர அவரது செயலாளர் பூ. பிரசாந்தனோ.. வேறு எவருமோ அதிக விருப்பு வாக்குகளைப் பெறவில்லை.
இந்த 4000 வாக்கு மோசடியினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் எஞ்சிய வாக்குகளின் அடிப்படையில் கடைசி உறுப்புரிமையைப் பெறத் தகுதி பெற்றிருந்த நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் ஆசனம் பறிக்கப்பட்டதுடன், மாகாண மட்டத்தில் அறுதிப்பெரும்பான்மை ஆசனங்களைப் பெற வேண்டிய த.தே.கூட்டமைகப்பின் இரண்டு ஆசனங்களும் அரசாங்கத்தினால் களவெடுக்கப்பட்டன.
இதனை சட்டவலுவுடன் நிரூபிக்க த.தே.கூட்டமைப்பிடம் வாக்களிப்பு நிலை முகவர்களால் வழங்கப்பட்ட வாக்களிப்பு உறுதிப் பத்திரம் இருக்கவில்லை. எனினம் சந்தர்ப்ப நிலைமைகள் சாட்சியத்தின்படி இதுவே உண்மை! சத்தியம்! இந்தக் கொடுமையை அமீரலி, மௌலானா போன்ற அரசாங்கத்திற்கு முட்டுக் கொடுக்குப்பவர்களும் மறுக்க முடியாது.
எனவே வட மாகாண சபைத் தேர்தலில் சகல வாக்களிப்பு நிலையங்களிலும் த.தே. கூட்டமைப்பு வாக்களிப்பு நிலைய முகவர்களை நியமித்து, அவர்களை மாலை 4:00 மணி வரை இருக்கச் செய்து அந்தந்த வாக்களிப்பு நிலைய அதிகாரியினால் வழங்கப்படும் அளிக்கப்பட்ட வாக்குகள் எத்தனை என்பதை உறுதிப்படுத்தும் பத்திரங்களைப் பெற்று வரும்படி கண்டிப்பாகப் பணிக்க வேண்டும்.
இவ்வாறு செயற்பட்டால் விடிய விடிய வாக்குள் எண்ணுகிறோம் எனக் கதையளந்து விட்டு மொத்த வாக்குகளையும் கூட்டிக் கழித்து விகிதாசாரம் எல்லாம் பிரித்து கடைசியில் கள்ளவாக்குத் தொகையொன்றைச் சேர்த்து எல்லவற்றையும் குழப்பியடிக்கும் 'ஹறாமான' தேர்தல் முடிவுகளில் இருந்து நாம் தப்பித்துக் கொள்ளலாம்.
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-