இளம் பட்டதாரிகள் தகவல் உத்தியோகத்தர்களாக வருவதற்கான சந்தர்ப்பம்
(எம்.எம்.ஏ.ஸமட்)
இளம் பட்டதாரிகள் தகவல் உத்தியோகத்தர்களாக வருவதற்கான சந்தர்ப்பத்தை தகவல் திணைக்களம் வழங்கவுள்ளது. இதற்கமைய, 20 தொடக்கம் 30 வயதுக்குற்பட்ட இளம் பட்டதாரிகளை மாவட்ட செயலகங்களிலுள்ள ஊடகப் பிரிவுகளில் காணப்படும் தகவல் உத்தியோகத்தர் தரம் 3 பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சையொன்றை தகவல் திணைக்களம் நடத்தவுள்ளது.
நுவரேலியா, காலி, மாத்தறை ஹம்பாந்தோட்டை யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, அநுரதாபுரம் மற்றும் பதுளை ஆகிய மாவட்ட செயலகங்களிலுள்ள ஊடகப் பிரிவுகளில் காணப்படும் சிங்கள மொழி மற்றும் தமிழ் மொழியிலான தகவல் உத்தியோகத்தர் தரம் 3க்கான வெற்றிடங்களை நிரப்புவதன் மூலம் இளம் பட்டதாரிகள் ஊடக உத்தியோகக்தர்களாக வரும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இம்மாதம் 30 ஆம் திகதி இப்பதவி நியமனத்துக்கு விண்ணப்பிப்பதற்கான முடிவுத்திகதி நிர்ணைக்கப்பட்டுள்ளதனால், இத்திகதிக்கு முன்னதாக தங்களது விண்ணப்பங்களை தகவல் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்க வேண்டுமெனவும் விண்ணப்பங்கள் திணைக்களத்தின் அறிவுறுத்தல் மற்றும் விதிகளுக்கமைய பூரணப்படுத்தப்பட்டிருக்க வேண்டுமெனவும் அரசாங்க வர்த்தமானியினுடாக தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

Post a Comment