சிறுவர் உரிமைகள் பரிந்துரை வலயமைப்பின் ஏற்பாட்டில் செயலமர்வு
(ஏ.பி.எம்.அஸ்ஹர்)
சிறுவர் உரிமைகள் பரிந்துரை வலயமைப்பினால (CRAN) ஏற்பாடு செய்யப்பட்ட அம்பாரை மாவட்ட செயலமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை அட்டாளைச்சேனையில் நடைபெற்றது.
சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக கேட்போர் கூடத்தில் சிறுவர் உரிமைகள் பரிந்துரை வலயமைப்பின் அம்பாரை மாவட்ட இணைப்பாளர் எம்.எச்.எம்.உவைஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ட்ரு விஷன் அமைப்பின் தவிசாளரும் சட்டத்தனியுமான உவைஸ் அப்துல் காதர் வளவாளராகக் கலந்து கொண்டு சிறுவர்கள் பாதுகாப்பு மற்றும் அவர்களது உரிமைகள் தொடர்பாக உரையாற்றினார்.
இதில் அரச அதிகாரிகள் சமுக சேவை நிறுவனங்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


Post a Comment