ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் தெஹிவளையில் குடும்ப இஜ்திமா
"நன்மை செய்யும் சமூகமே வெற்றி பெறும் சமூகம் "
நன்மை உண்மையானது, இலகுவானது, இயல்பானது. அனைவரும் விரும்பக் கூடியது. தீமை பிழையானது, சிரமத்தையும் மன அழுத்தத்தையும் தரக்கூடியது. உள்ளத்தை உறுத்தக் கூடியது, அனைவரும் வெறுக்கக் கூடியது. என்றாலும் மனிதர்கள் தீமை செய்கிறார்கள், எப்படிச் செய்கிறார்கள்? தீமை செய்பவர்கள் தீமையை நன்மை என்று நினைத்து ஒருபோதும் செய்வதில்லை. அவர்களுக்கு நன்கு தெரியும் நாம் தீமை செய்கின்றோம் என்று என்றாலும் தீமை செய்கின்றார்கள். காரணம் அவர்கள் பல்வேறு காரணிகளால் தீமை செய்வதற்கு தூண்டப்படுகின்றார்கள். எனினும் ஏனையோர் தனக்கு நன்மை செய்யவேண்டும் என்றே நினைக்கின்றார்கள். தீமை செய்கின்றவர்கள் கூட ஏனையோர் தனக்கு நன்மை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்கள் எனின் நன்மை தானே ஒரு மனிதனின் உள்ளத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றது. அத்தகைய நன்மை உலகில் வளர வேண்டும். வாழவைக்கப்பட வேண்டும். இஸ்லாம் அனைத்து நன்மைகளினதும் இருப்பிடமாகும்.
தனிமனிதன் செய்ய வேண்டிய நன்மைகள், குடும்பங்கள் செய்ய வேண்டிய நன்மைகள், சமூகம் செய்ய வேண்டிய நன்மைகள், அறிவு , ஆற்றல், திறன் என்பவற்றால் நடக்க வேண்டிய நன்மைகள், ஆட்சியினால் அதிகாரத்தினால் செய்ய வேண்டிய நன்மைகள் போன்ற நன்மைகள் அனைத்தினதும் இருப்பிடமாகவே இஸ்லாம் இருக்கிறது.
முஸ்லிம் சமூகத்தையும் அல்லாஹ் நன்மை செய்யும் சமூகமாகவே சித்தரிக்கிறான்.
"நீங்கள் தான் மனித சமூகத்திற்கென தோற்றுவிக்கப்பட்ட சிறந்த சமூகம். (காரணம்) நீங்கள் நன்மையை ஏவுகின்றீர்கள் தீமையைத் தடுக்கின்றீர்க்ள். " ஆலு இம்ரான் - 110
நன்மையை வாழவைத்து தீமைகளை இல்லாமல் செய்கின்ற சமூகம் தான் சிறந்த சமூகம் என அல்லாஹ் பிரஸ்தாபிக்கின்றான்.
அத்தகையதொரு சமூகம் தனது அந்தஸ்தை உணர வேண்டும். உலகில் அதிகம் நன்மை செய்யும் சமூகமாக மாற வேண்டும். இந்த நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு சிறப்பான ஒன்று கூடல். இந்த ஒன்று கூடலில் பங்கு பற்றிப் பயனடைய உங்களனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
வாருங்கள்!
தெஹிவளை நகரில்!
ஒரே தாய் உறவுகள் நாம்!
ஒரே குடும்பமாய்
வஹியின் ஒளியில் ஒன்றிணைவோம்.
தொடர்புகளுக்கு: அஷ்ஷெய்க் சஜீர் - 0773585586
ஏற்பாடு
தெஹிவளை இஸ்லாமிய பயிற்சி மன்றம்
கொழும்புப் பிராந்தியம்
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி

Post a Comment