Header Ads



உலகை கலக்க வருகிறது ஸ்மார்ட் கைக்கடிகாரம் (வீடியோ)

ஸ்மார்ட் கைப்பேசி, டேப்லட் உற்பத்திக்கு அடுத்தபடியாக ஸ்மார்ட் கைக்கடிகார உற்பத்தியில் கால் பதித்துள்ள Samsung நிறுவனம் Galaxy Gear எனும் ஸ்மார்ட் கைக்கடிகாரத்தினை வடிவமைத்து வருகின்றது. இந்நிலையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 4ம் திகதி அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படும் இக்கைக் கடிகாரம் தொடர்பான சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதன்படி 1.5GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய  Processor, 1GB RAM ஆகியவற்றினைக் கொண்டுள்ளது. இவை தவிர 1.67 அங்குல அளவு, 320 x 320 Pixel Resolution உடைய தொடுதிரை, 2 மெகாபிக்சல்கள் உடைய கமெரா போன்றவற்றினையும் உள்ளடக்கியுள்ளது. எனினும் இதன் விலை தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

No comments

Powered by Blogger.