ஆளில்லாத விமானங்களை கைப்பற்ற ஈரான் நாட்டு மாணவர்களுக்கு பயிற்சி
ஈரானில், ஆளில்லாமல் பறக்கும் உளவு விமானங்களை, தேடும் பயிற்சியை, மாணவர்களுக்கு அளிக்க, அந்நாட்டு ராணுவம் திட்டமிட்டு உள்ளது. ஈரான் நாடு, அணு ஆயுதம் தயாரிப்பதாக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் சந்தேகிக்கின்றன. இதனால், அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஈரானை உளவு பார்க்கும் விதமாக, ஆளில்லாமல் பறக்கும் விமானங் களை, அமெரிக்கா ஏவியுள்ளது. இதில் சில விமானங்களை, ஈரான் ராணுவம் பிடித்து வைத்ததோடு, அவற்றை ஒப்படைக்க மறுத்து விட்டது. ஆளில்லா விமானங்கள் மூலம், ஈரானை, அமெரிக்கா தொடர்ந்து கண்காணிக்கிறது. எனவே, ஈரான் நாட்டு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, அந்நாட்டு ராணுவம், சில பயிற்சிகளை அளிக்க திட்டமிட்டு உள்ளன. ஆளில்லாத விமானங்களை கண்டுபிடிக்கவும், முடிந்தால் அதை கைப்பற்றவும் தேவையான பயிற்சிகளை, ஈரான் ராணுவம், மாணவர்களுக்கு அளிக்கவுள்ளது.
.jpg)
Post a Comment