மட்டக்களப்பு மாவட்ட அரச ஊழியர்களுக்கு சிங்கள மொழிப் பயிற்சி முகாம்
(நஷ்ஹத் அனா)
தேசத்திற்கு மகுடம் திட்டத்தில் அரச மொழிக் கொள்கை அமுலாக்கல் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரச ஊழியர்களுக்கு சிங்கள மொழிப் பயிற்சி முகாம் தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் நடாத்தப்பட்டு வருகின்றது.
இதன் அடிப்படையில் கல்குடாத் தொகுதியில் தெரிவு செய்யப்பட்ட அரச ஊழியர்களுக்கு வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் (19.08.2013) சிங்களப் பயிற்சி முகாம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பணிரெண்டு (12) தினங்கள் நூற்றியெட்டு (108) மணித்தியாளங்கள் நடைபெறும் இப் பயிற்சி நெறியில் வாழைச்சேனை பிரதேச செயலகம், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகம், கல்குடா கல்வி வலயம், கோறளைப்பற்று பிரதேச சபை ஆகியவற்றில் இருந்து தெரிவு செய்யப்பட்ட அறுபது (60) அரச ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
பயிற்சியின் முடிவில் பரீட்சை நடைபெறுவதோடு தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளதாக தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ஆர் ஹேரத் தெரிவித்தார்.
பயிற்சியின் ஆரம்ப நிகழ்வில் தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ஆர் ஹேரத், தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் கணேசமூர்த்தி கோபிநாத், வாழைச்சேனை பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் எஸ்.பிரபாகரன், நிருவாக உத்தியோகத்தர் எஸ்.ஏ.றஹீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Post a Comment