Header Ads



அதிகம் படித்தவர்களுக்கு மன இறுக்கம் - ஆய்வாளர்கள் அதிர்ச்சி

கல்வித் தகுதி அதிகம்உடைய நபர்கள், மனதளவிலும், உடலளவிலும்அதிகம் பாதிக்கப்படுவதாக,ஆய்வாளர்கள் தெரிவித்துஉள்ளனர்.

உலகின் பல நாடுகளைச்சேர்ந்த மக்களும், கல்விக்குமுக்கியத்துவம் தந்து வருவதால், போட்டி உலகில்தங்கள் கல்வித் தகுதியைமேலும் மேலும் உயர்த்திக்கொள்வதற்காக, பலரும்அதிகம் படிக்கத் துவங்கிஉள்ளனர்.இவ்வாறு அதிகம்படிக்கும் நபர்கள், மனதளவிலும், உடலளவிலும்அதிகம் பாதிக்கப்படுவதாக,பெல்ஜியத்தைச் சேர்ந்தகென்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் அறிக்கைவெளியிட்டு உள்ளனர்.அதிக கல்வித் தகுதிஉடைய, 21 ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த, 17ஆயிரம் பணியாளர்களிடம்நடத்திய ஆய்வில், பலதிடுக்கிடும் தகவல்கள்வெளியாகி உள்ளன.

ஆய்வாளர்கள்வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: போட்டி நிறைந்தஉலகில், தங்களை நிலைநிறுத்திக் கொள்ள, பலரும்அதிகமாகப் படிக்கத் துவங்கிஉள்ளனர். அதிகம் படிப்பதால், அதிக அறிவைப் பெறமுடியும் எனினும்,அதுவே அவர்களின் மனஇறுக்கத்திற்குக் காரணமாகிவிடுகிறது.உலகின் பல நாடுகளிலும், தற்கால இளைஞர்கள்அதிகம் படித்தவர்களாய்இருக்கிறார்கள். எனினும்,அவர்களின் திறமைக்கேற்ற வேலை கிடைப்பதுஇல்லை. தங்கள் பணியில் முழு திறமையையும் வெளிப்படுத்த முடியாத சூழல்ஏற்படுவதால், ஒரு விதமன இறுக்கத்திற்கு ஆளாகின்றனர்.வாழ்க்கையில் தாங்கள்கற்ற அனைத்தையும்வெளிப்படுத்த முடியவில்லையே என்ற உணர்வுஅவர்களை உறுத்துகிறது. இதனால், மன இறுக்கத்தின் காரணமாக, அவர்களின் உடல் நிலையும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. நாங்கள் ஆய்வு செய்தவர்களில், 80 சதவீதத்திற்கும் மேற்பட்டோர், மனதளவிலும், உடலளவிலும்ஏராளமான பாதிப்புக்கு உள்ளாகியிருந்தனர்.

அதிகம் படித்த நபர்கள்,ஆரம்பத்தில் குறைந்தசம்பளம் மற்றும் தங்களின்திறமைக்குக் குறைவானவேலையில் சேருகின்றனர்.தங்களை விட திறமைமற்றும் தகுதி குறைந்த சீனியர்களின் கீழ் வேலைபார்க்க வேண்டியசூழ்நிலையாலும், சீனியர்களின் தாழ்வு மனப்பான்மையால், ஜூனியர்கள்அதிகம் அலைக்கழிக்கப்படுவதாலும், இவர்கள்மனதளவில் பெரிதும்பாதிக்கப்படுகின்றனர்.அதிக திறமை மற்றும்உயர்ந்த பட்டங்களைப்பெற்ற நபர்கள், குறுகியகாலத்திற்குள் தங்கள்தகுதிக்கேற்ற வேலையில்சேராவிடில், அதிக மனஇறுக்கம் ஏற்பட்டு, உடல்நிலை பாதிப்புக்கும்ஆளாகின்றனர். எனவே,அதிகம் படிக்கும் நபர்களை, மன இறுக்க நோய்அதிக அளவில் பாதிக்கிறது.இவ்வாறு, அந்தஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.