கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் தாக்குதல் - தங்க ஆபரணம் கொள்ளை, 40 வீடுகள் சேதம், 20 முறைப்பாடுகள்
(TL) கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் கிராண்ட்பாஸ் பகுதியில் ஏற்பட்ட அசாம்பவிதத்தில் 40 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்குறிப்பிட்ட சம்பவம் சம்பந்தமாக இதுவரைக்கும் 20 முறைப்பாடுகள் பதியப்பட்டுள்ளதாகவும் மேலும் முறைப்பாடுகள் பதியப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த முறைப்பாடுகளில் ஒரு முறைப்பாட்டில் தங்கள் வீடு தாக்கப்பட்டு அங்கிருந்த பொருட்கள் சேதமாக்கப்பட்டு ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணம் காடையர்களால் கொள்ளையிடப்பட்டுச் சென்றுள்ளதாக பதியப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஏனைய அதிகமான முறைப்பாடுகளில் வீட்டின் ஜன்னல் கதவுகள் சேதமாக்கப்பட்டுள்ளதாக பதியப்பட்டிருந்தன.

Post a Comment