Header Ads



கல்முனை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கொள்ளை

(யு.எம்.இஸ்ஹாக்)

கல்முனை நகரில் உள்ள பழமை வாய்ந்த எரிபொருள் நிரப்பு நிலையம்  இன்று (23) இரவு 12.30 மணிக்கு  உடைத்து கொள்ளை இடப்பட்டுள்ளது. அங்கிருந்த 3இலட்சத்து 30ஆயிரம்  ரூபா பணம்  கொள்ளை  இடப்பட்டுள்ளதாக கல்முனை பொலிசில்  முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

கல்முனை நகரில் உள்ள  ஓ .எம்.அலியார் எரிபொருள் நிரப்பு நிலையமே  இவ்வாறு கொள்ளை இடப்பட்டுள்ளது. கொள்ளை இடம் பெற்ற வேளை  நிலைய காவலாளியும்  தொழிலாளி ஒருவரும்  அங்கு கடமையில் இருந்துள்ளனர் என போலீசில்  முறையிடப்பட்டுள்ளது .

மேலும் இந்த எரிபொருள் நிரப்பு நிலையம் அமைந்துள்ள இடத்தின் முன்பாக 24 மணி நேரமும் கல்முனை  வீதி போக்குவரத்து பொலிசார்  கடமையில் இருப்பதும்  எந்த நேரமும்  குறித்த பிரதேசம் சன நடமாட்டம் நிறைந்த பகுதி என்பதும்  அருகில்  மக்கள் வங்கி  மறு முனையில் தனியார்  பஸ்  தரிப்பு நிலையம் என்பனவும் அமைந்துள்ளன . இந்த சம்பவம் தொடர்பாக  கல்முனை பொலிசார் விசாரணை செய்கின்றனர்.

1 comment:

  1. கொள்ளை அடிக்கபட்ட தொகை ரூபா 3 லட்சத்திக்கு அதிகம் என்பது போலீசில் முறைப்பாடு செய்வதற்க்கு சொல்லப்பட்ட தொகையா அல்லது அது உண்மையிலேயே களவு போன தொகை என்றால்அதன் பொறுப்பாளி உரிமையாளர் தான்..காரணம் எரிபொருள் நிரப்பு நிலையத்தை அண்
    .
    டியிருக்கும் மக்கள் வங்கியில் வாடிக்கையாளர் சேவை பி.ப.3 மணி வரை நடைபெறும் நிலையில் இவ்வளவு பெரிய தொகையை நிலையத்தில் வைத்திராமல் வங்கியில் வைப்பிலிட்டிருக்கலாம். பி.ப.3 மணியின் பின் சேர்ந்த தொகை என்பது சாத்தியம் அற்றது பொலிஸாரின் விசாரணை காவலாளியுடனும் தொளிலாலியுடனும் மட்டும் நில்லாது உரிமையாளரையும் துருவி விசாரணை செய்ய வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.