அட்டாளைச்சேனையில் கோணாவத்தை ஆற்றில் (சீபிளேன்) சேவை ஆரம்பமாகிறது
(நாஜி + ஏ.எல்.ஜனூவர்)
அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றில் நீரியல் விமான(சீபிளேன்) சேவையினை ஆரம்பிப்பிக்கப்படவுள்ளது. இந்நடவடிக்கையின் பொருட்டு நேற்று வியாளக்கிழமை சிவில் விமான சேவை அதிகார சபையின் உயர்மட்டக் குழுவினர் அங்கு சென்று பார்வையிடனர்.
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பையின் தலைமையில் சிவிவல் விமான சேவை அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எச்.எம்.சி. நிமலசிறி, பணிப்பாளர் அத்துல ஜயவிக்ரம, பிரதிப்பணிப்பாளர் ரஞ்சித் பிரேரா மற்றும் நீர்ப்பாசன திணைக்களத்தின் பிராந்தியப்பணிப்பாளர் எஸ்.எல். வீரசிங்க, பிரதிப்பணிப்பாளர் யூ.எல்.ஏ.நஸார், உதவி பிரதேச செயலாளர் எஸ். ஜேயரூபன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.
கோணாவத்தை ஆற்றில் படகில் சென்ற அமைச்சர் மற்றும் அதிகாரிகள் வேலைத்திட்டத்திற்கான சாத்திய நிலைமைகள் பற்றி அறிந்து கொண்டதுடன் ஆரம்பப் பணிகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கையினையும் மேற்கொள்வதற்காக அனுமதியினையும் வழங்கினர்.


Post a Comment