Header Ads



தலைப்பிறை தொடர்பில் சவூதிஅரேபியா உச்ச நீதிமன்றத்தின் குழப்பமான அறிவிப்பு

(தினகரன்)

சவூதி அரேபியாவில் செவ்வாய்க்கிழமை இரவு ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தென்படாததை அடுத்து குழப்பம் நீங்கியது. நேற்று புதன்கிழமை 29 ஆவது நோன்பு என சவூதி உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

முன்னதாக 28 ஆம் நோன்பு பூர்த்தியான நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு தலைப்பிறையை பார்க்கும்படி சவூதி உச்ச நீதிமன்றம் பொது மக்களை கோரியிருந்தது. இந்த அறிவிப்பு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது.

இதன்படி செவ்வாய்க்கிழமை இரவு தலைப்பிறை தென்பட்டால் இஸ்லாமிய நாட்காட்டியின்படி சந்திர சுழற்சியில் ஒரு தினம் குறைந்து 28 நோன்புகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுவிடும். சந்திர மாதம் 29 அல்லது 30 தினங்களாகவே உள்ளன.

ஆனால் சவூதி உச்ச நீதிமன்றம் முன்னர் வெளியிட்ட அறிவிப்பில், இந்த ஆண்டு ரமழான் தலைப்பிறை பார்ப்பதில் தவறு ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருப்பதாகவும் இது ஜூலை 10 இல் அன்றி 9 இல் ஆரம்பித்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது. கடைசியாக 1984 ஆம் ஆண்டில் நோன்பு 28 நாட்களில் முடிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.