Header Ads



மாட்டின் மீது மோதி விபத்துக்குள்ளான விமானம்

இந்தோனேசியா தலைநகர் ஜாகர்தாவில் இருந்து புறப்பட்ட லயன் ஏர் நிறுவனத்தின் ஜெட் ரக விமானம் நேற்று சுலவேசி தீவில் உள்ள கோரோன்டலா விமான நிலையத்தில் தரை இறங்கியது. 

விமானத்தின் சக்கரம் ஓடுபாதையில் பதியும் வேளையில் அருகாமையில் உள்ள புல்வெளியில் மேய்ந்துக்கொண்டிருந்த மாடுகளில் ஒன்று ஓடுபாதையின் குறுக்கே ஓடிவந்தது. 

நடக்கும் விபரீதத்தை விமானி உணர்ந்துக்கொள்ளும் முன்னர், விமானத்தின் நடுப்பகுதி சக்கரம் மாட்டின் மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் உடல் சிதறிய மாடு பல அடி தூரம் தள்ளிப்போய் விழுந்தது. 

மாட்டின் மீது மோதிய வேகத்தில் நிலைதடுமாறிய விமானம், ஓடுபாதையை விட்டு விலகி புல்தரையில் பாய்ந்தது. 

இச்சம்பவத்தில் விமானத்தின் சிறிய பகுதிய சேதமடைந்தது. ஆனால், அதிர்ஷ்டவசமாக பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. 110 பயணிகளும் பத்திரமாக விமானத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர். 

ஓடுபாதையின் குறுக்கே விபத்துக்குள்ளான விமானம் விழுந்து கிடந்ததால் அங்கிருந்து புறப்படும் இதர விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. 

இந்த விமானத்தை ஓட்டி வந்த விமானி இதுதொடர்பாக கூறுகையில், 'மேலே இருந்து பார்க்கும் போது ஓடுதளத்தில் நாய்தான் மேய்கிறது என்று நினைத்தேன். விமானம் நெருங்கிய வேளையில்தான் அது மாடு என்று தெரிந்தது' என்றார்.

No comments

Powered by Blogger.