Header Ads



அக்கரைப்பற்றில் நிலம் கீழே இறங்கிறது

(Tn) அக்கரைப்பற்று பிரதான வீதியில் அமைந்துள்ள தனியார் மரத்தளபாட நிலையம் அமைந்திருந்த பிரதேசத்தின் நிலப்பகுதி தாழ்வாக இறங்கிக் கொண்டிருப்பதனால் பெரும்பதற்ற நிலை ஏற்பட்டது.

பி.பகல் 2.30 மணியளவில் கட்டடம் அமைந்துள்ள பிரதேசத்தின் கீழ் தளத்தில் போடப்பட்டிருந்த தரை ஓடுகள் மேலே கிளம்பிய வண்ணம் நிலப்பகுதி தாழ்ந்து கொண்டு சென்றது. இச்சம்பவத்தையடுத்து குறித்த நிறுவனம் மூடப்பட்டதுடன் அங்கு பணியாற்றிய ஊழியர்களும் வெளியேற்றப் பட்டனர்.

இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு அக்கரைப்பற்று பொலிஸார் வருகை தந்திருந்தனர். இது சம்பந்தமாக புவியியல் சரித நிபுணர்கள் வரவழைக்கப்படவுள்ளதாக நிறுவனப் பணியாளர் ஒருவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.