Header Ads



இஹ்வானுல் முஸ்லிமினின் இடைக்கால தலைவராக மொஹமட் இஸ்ஸத் நியமனம்

எகிப்து முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் இடைக்கால உயர் மட்ட தலைவராக மஹ்மூத் இஸ்ஸத் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் அரசியல் பிரிவான சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சியின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “இரத்தம் படிந்த இராணுவ சதிப்புரட்சியாளர்களால் உயர் மட்ட தலைவர் மொஹட் பஅதி கைது செய்யப்பட்ட நிலையில், துணைத்தலைவரான மொஹமட் இஸ்ஸத் தற்காலிக அடிப்படையில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் உயர்மட்ட தலைவர் பொறுப்பில் செயற்படுவார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

69 வயதான இஸ்ஸத் 1960 களில் இருந்து முன்னணி உறுப்பினராக செயற்பட்டு வருகிறார். அவர் 1981 ஆம் ஆண்டில் அந்த அமைப்பின் நிறைவேற்று குழுவின் உறுப்பினரானார். இவர் முந்தைய எகிப்து அரசில் பல ஆண்டுகள் சிறை அனுபவித்தவராவார்.

2 comments:

  1. allah ungalaip porindikkolwanaha

    ReplyDelete
  2. யா அல்லாஹ் உனது தீனுக்காக பல்வேறு சோதனைகளை தாங்கிக்கொள்ளும் இத்தகைய மனிதர்களுக்கு அருள் செய்வாயாக! அவர்களை சூழ்ச்சியாளர்களின் சதிகளில் இருந்து பாதுகாப்பாயாக. சிறைவாசம் கொள்ளும் இஹ்வானிய சகோதரர்களுக்கு உனது பாதுகாப்பை வழங்குவாயாக. அநியாயக்காரர்களுக்கு உனது தீர்ப்பை வெகு விரைவில் வெளிப்படுத்துவாயாக!

    ReplyDelete

Powered by Blogger.