Header Ads



பேஸ்புக்கின் நிறுவனரின் பக்கத்தை முடக்கிய பலஸ்தீன ஆராய்ச்சியாளர்

சமூக இணைய தளத்தில் பிரபலமாக உள்ள பேஸ்புக்கின் ஐந்து நிறுவனர்களுள் ஒருவர் மார்க் சக்கர்பெர்க். பொதுவாக பேஸ்புக் செயல்பாடுகளில் ஏதேனும் பாதுகாப்புக் குறைகள் இருப்பதை யாரேனும் சுட்டிக்காட்டினால், அவருக்கு அந்த நிறுவனம் தகுந்த சன்மானத்தினை அளிக்கும்.

ஆனால், பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளரான கலீல் ஷ்ரீயெட்டா என்பவர் பேஸ்புக் நிறுவனரான மார்க் சக்கர்பெர்கின் பக்கத்திலேயே பாதுகாப்பு குறைகள் இருப்பதை கண்டறிந்தார். இவர் இதுகுறித்து பேஸ்புக் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு முதலில் தகவல் கொடுத்துள்ளார். அதனை அவர்கள் அலட்சியப்படுத்தியதால் அந்த பக்கத்தை முடக்கினார். அதிகாரிகளின் அலட்சியத்தினால்தான் இதுபோல் நிறுவனரின் பக்கத்தையே முடக்க நேர்ந்ததாகக் கூறி அதற்கு மன்னிப்பும் கேட்டிருந்தார்.

இதற்கு சன்மானமாக பேஸ்புக்கில் கலீலின் பக்கம் நீக்கப்பட்டதுதான் நடந்தது. இத்துடன் அவரது நடைமுறைகள் சேவை விதிகளை மீறியதாக அமைந்ததால் அவருக்கு சன்மானம் அளிக்கப்படமாட்டாது என்றும், இருப்பினும் அவர் தனது சேவையைத் தங்களுடன் தொடரலாம் என்றும் ஒரு தகவலையும் அனுப்பியிருந்தது.

பாதுகாப்புக் குறைகளை சுட்டிக்காட்டுவதை வரவேற்றாலும், உபயோகிப்பாளரின் பக்கத்தை முடக்குவதை தங்கள் நிறுவனம் உற்சாகப்படுத்தாது என்று பேஸ்புக் நிறுவனம் பின்னர் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது.

No comments

Powered by Blogger.