Header Ads



புத்தளத்தில் அஸாத் சாலி

தேசிய ஐக்கிய முன்னணியின் தேசியத் தலைவர் அஸாத் சாலி எதிர்வரும் வெள்ளிக்கிழமை 23ம் திகதி புத்தளம் மாவட்டத்துக்கு விஜயம் செய்யவுள்ளார்.
தேசிய ஐக்கிய முன்னணி எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் வட மேல் மாகாணத்தில் புத்தளம் மாவட்டத்தில் குடை சின்னத்தில் தனித்துப் போட்டியிடுகின்றது. 

உதேசிய ஐக்கிய முன்னணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசார கூட்டங்களில் பங்கேற்பதற்காகவே அஸாத் சாலி அங்கு விஜயம் செய்கின்றார்.

புத்தளம் கொட்ராமுல்லை, புளிச்சான்குளம், உடப்பு, கற்பிட்டி, புத்தளம் நகர் ஆகிய பகுதிகளில் இடம்பெறும் பிரசாரக் கூட்டங்களில் அஸாத் சாலி உரையாற்றவுள்ளார். இந்தக் கூட்டங்களில் அதிகாரத்தைப் பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம் அமைப்பின் முக்கியஸ்தர்களான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன, மனோகணேசன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் ஆகியோரும் உரையாற்றவுள்ளனர்.

ஊடகப் பிரிவு
தேசிய ஐக்கிய முன்னணி

4 comments:

  1. ஆசாத் சாலிஹ் வெற்றிபெறுவதன் மூலம் முஸ்லிம் மக்களுக்கும் மற்றும் சிறு பான்மை மக்களுக்கும் வெற்றி கிடைக்கும் என்று நம் சமூகத்துக்கு தோண்றினால், நிட்சயம் அவருக்கு வாக்களிக்கட்டும்.

    மாறாக, இவர் மீண்டும் UNP இல் போய் இணைந்து தேர்தல் கேட்பது நிட்ச்சயமாக அவரின் அரசியல் பிழைப்புக்கு அன்றி சமூகத்துக்கு அல்ல.

    சென்ற ஜனாதிபதி தேர்தலிலே ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகம் இந்த UNP தான் வாக்களித்தது... என்ன நடந்தது..... சிறுபாண்மை வாக்குகளை நம்பி இல்லாத மகிந்த அரசு, நிட்சயம் இதிலும் வெல்லும்.....

    வீராப்பு பேச்சு, போலி பேச்சு மூலம் முஸ்லிம் சமூகத்தை மேலும் கோழைகளாக்க வேண்டாம்.....

    ReplyDelete
  2. Mr.slahy unp better then pa.pa win or lostthere not stop or ban bbs terrorist group.if president say any place all mislim give to vote pa we stop the bbs NO.why muslims want to give them

    ReplyDelete
  3. இப்படியே சொல்லிச் சொல்லி பேரினவாத அரசுக்கு ஆதரவளித்து உங்க கோவணத்தையும் கொடுத்துட்டு அம்மணமா நிக்க தயாராக இருங்க!

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  4. ஒரே இறைவன் என்று நம்பிக்கை கொண்ட முஸ்லிம்களுக்கு இந்த நாட்டிலே எத்தனை தேசியத் தலைவர்கள் எல்லோரும் தலைவரானால் வாக்களிப்பது மலக்குகளா

    ReplyDelete

Powered by Blogger.