நிந்தவூர் நெஸ்கோ விளையாட்டு கழகத்திற்கு கழக சீருடை அன்பளிப்பு
(சுலைமான் றாபி)
நிந்தவூர் நெஸ்கோ விளையாட்டு கழகத்திற்கு சமூக சேவகர்களான எம்.சி. நஹார் (றியாஸ்), எம்.சி.எம். றிபாய் ஆகியோர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் புதிய கழக சீருடை (20.08.2013) செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
கழக உப தலைவர் எம். அச்சி முஹம்மட் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், நிந்தவூர் பிரதேச சபையின் எதிர்க்கட்சி தலைவர் வை.எல்.சுலைமாலெவ்வை, கிராம சேவை உத்தியோகத்தர்களான ஏ.எம். பலூலுல்லாஹ், எம். சித்தீக், தொழில் நுட்ப உத்தியோகத்தர் எம். சக்கி அஹமட், இளைஞர் சேவை அதிகாரி எம்.ஐ.எம்,பரீட், நிந்தவூரின் முன்னணி விளையாட்டு கழகங்களின் தலைவர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மற்றும் சமூக ஆர்வலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இதேவேளை நிந்தவூர் வரலாற்றில் நெஸ்கோ விளையாட்டு கழகம் தனது இளைஞர் கழகத்தின் மூலமாக இளைஞர் பாராளுமன்ற அமைச்சரை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இளைஞர்களை ஊக்குவித்து அவர்களை சமுதாயத்தில் தீர்க்க தரிசனம் மிக்கவர்களாக மாற்றுவது நம்மீதுள்ள கட்டாய கடமையாகும். இந்த நிலையில் இளைஞர்கள் குறுகிய மனக்கோட்பாடுகளை கழைந்து விளையாட்டின் மூலம் ஒற்றுமையினை வளர்க்க வேண்டும் என நிந்தவூர் நெஸ்கோ விளையாட்டுக்கழகதிற்கான புதிய கழக சீருடை அறிமுக விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் அவர்கள் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தனது உரையில்.
இளைஞர்கள் பிணக்குகளின் மூலம் குறுகிய மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளாமல் தூரநோக்கு சிந்தனையோடு செயற்பட வேண்டும். ஏனென்றால் தற்கால அரசில் இனிவரும் காலங்களில் அரச தொழில் செய்வது மிகச்சிரமமாக காணப்படும். அதே போன்று ஒரு இளைஞனுக்கு நிலையான வாழ்கை நெறிமுறையினை காட்டுவதென்றால் ஒரு நிலையான தொழிலிற்கு வழிகாட்டுவதுதான். அதனை இளைஞர்கள் தற்காலத்தில் இலகுவாக நிறைவேற்றிக்கொள்ளலாம். அதற்காக இலங்கையில் தேசிய மற்றும் மாகாண மட்டங்களில் இடம்பெறும் விளையாட்டுப் போட்டிகளின் மூலம் தங்களது திறமைகளை வெளிகாட்டி விஷேட புள்ளிகளைபெற்று அதன் மூலம் பல்கலைகழகதிற்கோ அல்லது ஆசிரியர் கலாசாலைக்கோ தெரிவாகக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளது. இதனை உண்மைப்படுத்தும் முகமாக நிந்தவூர் மதீனா விளையாட்டுக்கழகம் மூலமாக சுமார் 18 வீரர்கள் ஆசிரியர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். இதே நிலை தற்காலத்தில் காணப்படும் இளைஞர்கள் மீதும் ஏற்றப்பட வேண்டும். அங்கு அவர்கள் இளைஞர்களாக இருந்த கால கட்டத்தில் அவர்களுக்கு கிடைத்த வளங்களை சரியான முறையில் பயன்படுத்தினார்கள். அந்த வேளை அவர்களிடத்தில் பொறாமை இருந்திருக்காது. நிச்சயமாக போட்டிதான் இருந்திருக்கும். எனவே, தற்கால இளைஞர்கள் பொறாமையினை களைந்து விட்டு போட்டிகளை வளர்க்க வேண்டுமே தவிர தங்கள் வளங்களை பகிர்ந்து கொள்ள பொறாமை அவசியம் இல்லை எனத்தெரிவித்தார்.
நெஸ்கோ விளையாட்டுக்கழகதின் உப தலைவர் எம். அச்சி முஹம்மட் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நிந்தவூர் பிரதேச சபையின் எதிர்க்கட்சி தலைவர் வை.எல்.சுலைமாலெவ்வை, கிராம சேவை உத்தியோகத்தர்களான ஏ.எம். பலூலுல்லாஹ், எம். சித்தீக், தொழில் நுட்ப உத்தியோகத்தர் எம். சக்கி அஹமட், இளைஞர் சேவை அதிகாரி எம்.ஐ.எம்,பரீட், சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எஸ். சஹாப்தீன், நிந்தவூரின் முன்னணி விளையாட்டு கழகங்களின் தலைவர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மற்றும் சமூக ஆர்வலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Post a Comment