Header Ads



'ரவூப் ஹக்கீம் அரசில் இருந்தும் முஸ்லிம்களுக்கு எதிரானவற்றை தடுக்க முடியாதுள்ளார்'

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

இலங்கை அரசியல் வரலாற்றில் வடமேல் மாகாண  சபைக்கு இம்முறை தேசிய ஜக்கிய முன்னணியின் 3 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவது உறுதியாகும் என தெரிவித்துள்ள வேட்பளாரும், முன்னால் சமூக சேவைகள் பிரதி அமைச்சருமான எஸ்.எஸ்.எம்.அபூபக்கர், இந்த அராசங்கம் இன்று முஸ்லிம்களுக்கெதிராக செயற்படுவதற்கான அத்திவாரத்தை இட்டுக் கொடுத்தவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் என்றும் குற்றம் சாட்டினார்.

வடமேல் மாகாண சபைக்கு புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து புத்தளம் போல்ஸ் வீதியில் இடம் பெற்ற பிராசரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தேசிய ஜக்கிய முன்னணயின் தலைவர் ஆசாத் சாலி தலைமையில் இடம் பெற்ற இந்த கூட்டத்தில் பிரதி அமைச்சர் மேலும் பேசுகையில்,

1988 ஆம் ஆண்டு வடமேல் மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வெற்றியினை உறுதிப்படுத்தும் வகையில் பணியாற்றிவர் என்ற வகையில் இந்த மாவட்டத்தில் உள்ள மக்களுடன் மிகவும் நெருக்கமான உறவை கொண்டுள்ளேன்.அந்த தேர்தலில் புத்தளம் மக்களுக்காக டாக்டர் இல்யாஸ் அவர்களை வெற்றி பெறச்செய்தோம்.

அதே போல் இந்த மாவட்டத்து மக்கள் இடம் பெயர்ந்துவந்த ஒரு இலட்சத்துக்கும் அதிகமான வடமாகாண மக்களை அரவனைத்த உயர் பண்புகளை கொண்டவர்கள் என்பதை எம்மால் ஒரு போதும். மறக்க முடியாது.

இன்று இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும்  தாக்குதல் சம்பவங்களுக்கு அடிப்படை காணமாக இந்த ஆட்சியாளர்களை பாரக்கின்றோம்.நாட்டின் ஜனாதிபதியாக இருவர் இரு முறை இருக்க முடியும் என்ற சட்டத்தை மாற்றி எத்தனை முறை இருக்க முடியும் என்ற திருத்தத்துக்கு ஆதரவாக முஸ்லிம் காங்கிரஸ் வாக்களித்தமையின் விளைவை நாம் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்.இந்தத் துரோகத்தனத்தை செய்த தற்போதைய கட்சியின் தலைவர் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் அரசாங்கத்துக்குள் இருந்து கொண்டும் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளை தவிர்க்க முடியாத நிலையில் இருப்பதாகவும் முன்னால் பிரதி அமைச்சர் அபூபக்கர் கூறினார்.

No comments

Powered by Blogger.