புல்மோட்டை பிரதேச வைத்தியசாலை மாவட்ட ஆதார வைத்தியசாலையாக தரமுயர்வு
திருகோணமலை மாவட்ட புல்மோட்டை பிரதேச வைத்தியாசாலை மாவட்ட வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் தெரிவித்தார். மேற்படி நடவடிக்கையானது கடந்த கிழக்கு மாகாண சபையின் முன்னாள் மாகாண சுகாதார அமைச்சர் அல்ஹாஜ் சுபைர் அவர்களின் கவனத்திற்கு பல முறை கொண்டுவரப்பட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த வேளை கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டது.
பின்னர் மீண்டும் புதிய கிழக்கு மாகாண சபை ஆரம்பிக்கப்பட்டு மாகாண சுகாதார அமைச்சர் அல்ஹாஜ் எம்.ஐ.எம்.மன்சூர் அவர்களது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு அவரின் தொடரான நடவடிக்கையின் மூலம் எமது பிரதேச வைத்தியசாலை மாவட்ட ஆதார வைத்தியசாலையாக மத்திய அரசாங்க சுகாதார அமைச்சின் பொது சுற்றறிக்கை கடித இல:02-61/2005(1)த்தின் படி நிலை (டீ) யாக தரமுயர்தப்பட்டு வைத்திய கலாநிதி வை.டி.நிஹால் ஜயதிலக செயலாளர்-சுகாதார அமைச்சு அவர்களினால் செயலாளர் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுக்கு கடிதமூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிரதி புல்மோட்டை வைத்தியாசாலைக்கு 2013.08.24ம் திகதி அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இதன் பலனாக புல்மோட்டை மற்றும் அதனை அண்டிய இதர பிரதேசங்களான குச்சசெளி, புடவைக்கட்டு,திரியாய்,பரண மதவாச்சிய,மற்றும் தென்னமாடி போன்ற பிரதேசங்களில் வாழும் மூவின மக்களும் இதன் மூலம் நன்மையடையவுள்ளதாக மாகாண சபை உறுப்பினர் அன்வர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment