Header Ads



முஸ்லிம் ஆசிரியரே இது நியாயமா..?

(இ. அம்மார்)

மாவத்தகம பொலிஸ் பிரிவில் கண்டி வீதியில் அமைந்துள்ள பறகஹதெனிய ஜும் ஆப் பள்ளிவாசலுக்கு முன்னால் போடப்பட்டுள்ள அமைதியாகச் செல்லவும் என்ற வாசகத்தைக் கொண்ட விளம்பரப் பதாதைக்கு 14-08-2013 அதிகாலை 4 மணி அளவில் சீமெந்து பூசி அதன் வாசகத்தை மறைக்க வருகை தந்த நபர் ஒருவர் ஊர் இளைஞர்களால் பிடிக்கப்பட்டு மாவத்தகம பொலிஸில் ஒப்படைக்கப்ட்டுள்ளார்.

இவர் இந்தப் பஹகஹதெனிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் பாடசாலையில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இவர் மோட்டார் சைக்கில் மூலம் வந்து இந்த விளம்பரப் பதாதைக்கு சீமெந்து பூச முற்பட்ட போது அவரை நோக்கி கல்லெறி வந்ததை அடுத்து அவர் வந்து மோட்டா சைக்கிலை விட்டு ஓடிச் சென்றுள்ளார் பின்னர் அந்த மோட்டார் சைக்கிலை எடுக்க அவர் பள்ளிவாசலுக்கு வந்த போது இளைஞர்களால் பிடிக்கப்பட்டு பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

மாவத்தகம பொலிஸ் பிரிவில் கண்டி குருநாகல் பிரதான வீதியில் அமைந்துள்ள இரு பள்ளிவாசல்களுக்கு முன்னால் அமைதியாகச் செல்லவும் என்று போடப்பட்டுள்ள விளம்பரப் பதாதையை மாவத்தகம பொலிஸார் 12-08-2013 மு.ப 10. மணி அளவில் அகற்றுவதற்காக வருகை தந்து அகற்ற முற்பட்ட போது ஊர் மக்களுக்கும் மற்றும் பொலிஸாருக்குமிடையே கருத்து முரண்பாடுகள் இடம் பெற்றதுடன் பிரதேசத்தில் ஒரு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

பொது பல சேனாவினால்  குருநாகல் நகரில் நடத்தப்பட்ட பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அக் கூட்டத்தில் பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்த ஞான தேரர் அங்கு உரை நிகழ்துகையில் கண்டி குருநாகல் வீதியில் பறகஹதெனிய பள்ளிவாசலுக்கு முன்னால் அமைதியாகச் செல்லுங்கள் என்று  விளம்பரப் பதாதையை அகற்றுமாறு வேண்டுகோள் விடுத்ததுடன் அதனை அகற்றாவிட்டால் தாங்கள் அகற்ற வேண்டி வரும் எனவும் அங்கு அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார். 

அதனைத் தொடர்ந்து  மாவத்தகம பிரதேச சபை உறுப்பினர் யாசிம் சேர் இல்லத்தில் இந்தச் சம்வம் தொடர்பாக விசேட கூட்டம் 12-08-2013 அன்று இரவு எட்டு மணி அளவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் விளம்பரப் பலகையை அகற்றுவதில்லை அவ்வாறு அகற்றுவதற்கு நாங்கள் இடமளிக்க மாட்டோம் என்று அங்கு வருகை தந்திருந்த மக்கள் மத்தியில் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நெரஞ்சன் விக்கிரமசிங்க மற்றும் குருநாகல் மாவட்ட ஸ்ரீ. சு. கட்சி அமைப்பாளர் அப்துல் சத்தார் ஆகியோர் இணைந்து மக்களிடத்தில் உறுதி மொழி வழங்கினர் அத்துடன் விளம்பரப் பலகையை பொலிஸ் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் பெரிய பள்ளிவாசலுக்கும் சென்று பார்வையிட்டனர்

இந்த விளம்பரப் பதாதை தொடாபாக இந்தப் பிரதேசத்தில் பெரும் சல சலப்பு ஒன்று இருந்து கொண்டிருக்கும் போதே இந்தச் சம்பம் நடந்துள்ளது மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற் கொணடுள்ளனர்.

2 comments:

  1. dear paragahadeniya brothers.it is not a small subject.bbs well planed.they will remove that board very soon.after that they will tell this is not our people work.those were removed by muslims and putting our to of head.that is sure.now all are needed to be carefull.

    ReplyDelete
  2. The question is that why is it so important to have such sign-boards?? Forget about BBS nonsense..but do we really need to have such warnings/ instructions in front of Masjids?? Any good mannered person would always respect any sacred place of worship.

    ReplyDelete

Powered by Blogger.