Header Ads



முஸ்லிம்களுக்கு எதிராக 210 வன்முறை சம்பவங்கள்

கிராண்ட்பாஸ் பள்ளிவாயல் தாக்கப்படும் போது அதனைத்தடுக்காது பொலிசார் பார்த்துக் கொண்டிருந்துள்ளனர். இதிலிருந்து அதன் சூத்திரதாரிகள் யார் என்பதை பொதுமக்கள் நன்கு அறிந்துள்ளனர் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

அநுராதபுரம் ஓட்டுப்பள்ளம் சியாரம் உடைப்பு முதல் கிராண்ட்பாஸ் பள்ளிவாயல் தாக்குதல் வரை நாட்டில் முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் என 210 சம்பவங்கள் இதுவரை நடந்துள்ளன. இவையனைத்தும் பெரும்பான்மையினரால் செய்யப்பட்டவை.

இவற்றில் ஏதாவது ஒரு சம்பவத்திற்கு அரசாங்கம் உருப்படியான நடவடிக்கை எடுத்திருந்தால் இவற்றுக்கு எப்போதோ முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம். ஆனால் அரசு இதனைச் செய்யவில்லை. சர்வதேச ரீதியாக பிரபல்யம் பெற்று விளங்கிய எல்.ரீ.ரீ.ஈ அமைப்பை வெற்றி கொண்ட அரசாங்கத்திற்கு முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுவோரைக் கட்டுப்படுத்துவது என்பது ஒன்றும் முடியாத காரியமல்ல. இதனை அரசாங்கம் செய்யவில்லை. ஏன் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

இப்படி ஏதாவது சம்பவங்கள் நடக்கும் போது மட்டும் நமது அமைச்சர்களும், ஆளுங்கட்சி உறுப்பினர்களும் அறிக்கை விடுவார்கள் அல்லது அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுவார்கள். அத்தோடு அவர்களின் பொறுப்புகள் முடிந்துவிடும். எனினும், சம்பவங்கள் முடியாமல் தொடர்கதையாகவே உள்ளன. இதனை சகல முஸ்லிம்களும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கிராண்ட்பாஸ் சம்பவத்தில் பொலிசார் பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்பதற்காக அவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென சிலர் கூறுகின்றனர். இது பிழையானது. பொலிசாரை பார்த்துக் கொண்டிருங்கள் என்று உத்தரவிட்டவர் யார் என்று இனங்கண்டு அவருக்கெதிராகவே நடவடிக்கை எடுக்கச் சொல்ல வேண்டும். இதுதான் உண்மை.

அரசாங்கமும், ஆளுங்கட்சி முஸ்லிம் அரசியல் பிரமுகர்களும் முஸ்லிம்களைத் தொடர்ந்து ஏமாற்றலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பொதுபலசேனாவின் ஆரம்பகர்த்தாக்கள் யார்? இது போன்ற அமைப்புகளை இயக்குபவர்கள் யார் என்ற விடயங்கள் எல்லாம் எல்லா முஸ்லிம்களுக்கும் தெரியும் என்பதை இவர்களுக்கு நாம் உணர்த்த வேண்டும்.

இதற்கு சரியான சந்தர்ப்பம் நமக்கு கிடைத்துள்ளது. அதுதான் மாகாணசபைத் தேர்தல்களாகும். எனவே, சகல முஸ்லிம்களும் இதனைக் கவனத்தில் கொண்டு தமது வாக்குகளைப் பயன்படுத்த வேண்டும். இது மார்க்க ரீதியாகவும் நமக்கு வலியுறுத்தப்பட்ட விடயமாகும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 comments:

  1. எல்லாமே மஹிந்த சிந்தனை............

    ReplyDelete
  2. நாட்டில் மாபெரும் கலவரம் ஒன்று உருவாகிடுமோ எனப் பயந்த வேலையில் எல்லாம் ஒரு சுமுகமான முறையில் சமாதனமாக முடிந்ததையிட்டு எல்லோரும் மகிழ்ச்சியடைகின்றனர். அல்ஹம்துலில்லாஹ். இருந்தாலும் அது ஒரு நிரந்தர சமாதானமாக இருக்குமா? என்பதுதான் சந்தேகம். மீண்டும் மீண்டும் மஸ்ஜித்கள் உடைக்கமாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அப்படியல்ல எமக்கு நிரந்தர சமாதானமும் நிம்மதியான வாழ்க்கையும் தேவை. அதற்கு என்ன செய்யலாம் என்பதையே நாம் யோசிக்க வேண்டும். நாளை இவர்களைவிட கொடியவர்கள் வந்து, இதை விட கொடிய திட்டங்களை தீட்டி செயல் பட்டால்? என்பதை எல்லாம் நாம் சிந்தித்து செயல்பட வேண்டும். சமாதான பேச்சுக்கள் ஒன்றும் நிலையான வெற்றியைத் தராது. தேர்தல் வாக்குகளாலும் இவ்வாரான பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் முடியாது.

    ReplyDelete
  3. All the incident done by government and full support of mahinda rajapaksa and his brother kothabaya this matter even the small child understand but government fully supporting to BBS.actually BBS government group.

    ReplyDelete

Powered by Blogger.