வசதி குறைந்த குடும்பங்களுக்கும், கஷ்ட பிரதேச பள்ளிவாயலுக்கும் குடி நீர் இணைப்பு வவுச்சர்கள்
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஷன் நிறுவனத்தால் வசதி குறைந்த 4000 குடும்பங்களுக்கு குடி நீர் இணைப்பு வழங்குவதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் ஒரு தொகுதி குடும்பங்களுக்கு குடி நீர் இணைப்புக்கான வவுச்சர்கள் வழங்கும் நிகழ்வு இன்று செய்வாய்க்கிழமை காலை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஷன் நிறுவனத்தின் பணிப்பாளரும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சவுதி அரேபிய நாட்டில் இருந்து வருகைதந்த நிதாஉல் ஹைர் நிறுவனத்தின் தலைவர் காலித் பின் ஸாலிஹ் அத்தாவூத்உள்ளிட்ட அந் நிறுவனத்தின் பிரதிநிதிகள் ,சவூதி அரேபிய அப்ஹா பல்ககலைகழகத்தின் போராசிரியர் அஷ்ஷேய்க் ரஸீன் ஹஸன் அல்மாயி , ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஷன் நிறுவனத்தின் சர்வதேச விவகாரங்களுக்கான் பணிப்பாளர் நாயகம் அஷ்ஷேய்க் மும்தாஸ் (மதனி),உலமாக்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
இன்று வழங்கிவைக்கப்பட்ட குடி நீர் இணைப்பு வழங்கும் நிகழ்வில் 194 வசதிகுறைந்த குடும்பங்களுக்கும் 6 கஷ்ட பிரதேச பள்ளிவாயலுக்கும் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment