ஈராக்கில் ஒரே நாளில் 2 பெண்கள் உள்பட 17 பேருக்கு மரண தண்டனை
ஈராக்கில் ஒரே நாளில் 2 பெண்கள் உள்பட 17 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு உலகம் முழுவதிலும் இருந்து மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஈராக்கில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 17 பேருக்கு மரண தண்டனை விதித்துள்ளது. இதில் 2 பெண்களும் அடங்குவர். நேற்று அனைவருக்கும் ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
ஈராக் மக்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டது என பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த 2 பெண்கள் உள்பட 17 பேருக்கு ஈராக் நேற்று மரண தண்டனை வழங்கியது கடந்த ஒரு வருடத்தில் மட்டும் ஈராக் அரசு 67 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றி உள்ளது என மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
.jpg)
Post a Comment