Header Ads



எகிப்து இராணுவத்தின் வெறியாட்டத்திற்கு கட்டார், துருக்கி, ஈரான் கண்டனம்


எகிப்து பாதுகாப்பு படையினரின் நடவடிக்கைக்கு சர்வதேச அளவிலும் கண்டனங்கள் வெளியாகியுள்ளன. ஆர்ப்பாட்டக்காரர்கள் மீத படைகளை ஏவிவிட்டதற்கு கட்டார் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. இதனை ஒரு படுகொலையாக விபரித்து ஈரானும் கண்டனம் வெளியிட்டுள்ளது. எகிப்து படுகொலைக்கு சர்வதேச சமூகம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என துருக்கி வலியுறுத்தியுள்ளது.

அதேபோன்று உயிர் பலிகள் குறித்து கடும் கவலையை வெளியிட்டிருக்கும் ஐரோப்பிய ஒன்றியம் அனைத்து தரப்பையும் அமைதி காக்கும்படி கேட்டுள்ளது. எகிப்தின் முன்னணி இஸ்லாமிய நிறுவனமான அல் அஸ்ஹர் இரத்தம் சிந்தப்பட்டது மற்றும் படையினர் பயன்படுத்தப்பட்டதற்கு கண்டனத்தை வெளியிட்டுள்ளது. அல் அஸ்ஹர் தலைமை இமாம் ஷெய்க் அஹ்மட் அல் தய்யிப் எகிப்து வானொலியில் வெளியிட்ட அறிவிப்பில், “வன்முறைகள் பேச்சுவார்த்தைக்கு மாற்றாக அமையாது. அனைத்து தரப்பும் சுய கட்டுப்பாட்டை கடபிடிக்க வேண்டும்” என்றார்.

3 comments:

  1. if muslims mind not emaan like this happening

    ReplyDelete
  2. YA ALLAH ...PROTECT YOUR BELIEVERS ALL OVER THE WORLD..AMEEN

    ReplyDelete
  3. Only IRAN,Turkey & Qatar are the real muslim countries.Where is Saudi kingdom in the list of condemning Egypt military government.Israeli supporter Saudi ,UAE and other all arab countries except Iraq & Syria are responsible for the Egypt bloodsheding.

    ReplyDelete

Powered by Blogger.