காணாமல் போனவர்களை விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு
யுத்த காலத்தில் வடக்கிலும் கிழக்கிலும் காணாமல்போனவர்கள் பற்றி விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் உறுப்பினர்களை நியமித்துள்ளார்.
மக்ஷ்வெல் பராக்கிரம பரணகம தலைவராகவும், திமின்கு படாதுருகே ப்ரியந்தி சுரஞ்சனா வைத்தியரட்ண, மனோ ராமநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆணைக்குழுவுக்கு விசாரணைகளைச் செய்வதற்கும் தேவைப்பட்டால் புலனாய்வு செய்வதற்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. ஆறு மாதங்களுக்குள் விசாரணை அறிக்கையை ஆணைக்குழு சமர்ப்பிக்க வேண்டும். ஆட்கள் கடத்தப்பட்ட அல்லது காணாமல் போகச்செய்த சம்பவங்கள் கண்டறியப்படுமிடத்து அதற்குப் பொறுப்பானவர்களை அடையாளம் காண்பது அவசியம் எனவும், அந்த நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு வலியுறுத்தியுள்ளார்.
பொதுமக்களின் பாதுகாப்பு, நல்வாழ்வு என்பவற்றுக்காகவும், எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் இடம் பெறுவதைத் தடுப்பதற்கும் இவ் விசாரணைகள் மேற்கொள்ளப்படு கின்றன என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சுட்டிக் காட்டி யுள்ளார். மேலும் ஜனாதிபதியி னால் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக் குழு அதன் பணிகளை மேற் கொள்வதற்கு உதவியும் ஒத்துழைப்பும் வழங்கும்படி அனைத்து அரசாங்க அலுவலர்களுக்கும் சம்பந்தப்பட்ட நபர்களுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை வழங்கியுள்ளார்.

நீங்க 'கற்றுத் தந்த பாடங்கள்' ஆணைக் குழு சமர்ப்பித்த அறிக்கைய முதல்ல அமுல் நடத்துங்க சார். அதுக்குப் பிற்பாடுதான் சார் நீங்க அமைக்கிற ஒங்கட ஆணைக் குழுவுக்கு கொஞ்சமாவது பொறுமதி வரும். புரிஞ்சுதா சார்?
ReplyDeleteஆணைக்குளுதானே. நிச்சியமாக அறிக்கை வர்றது. வந்தாலும் பயன்தாராது. யாருக்கும் சட்டம் பாயாது. ஏனேன்ட்ரல் ஆட்களை காணாமல் போகசைததவாறே அவர்தானே
ReplyDelete