Header Ads



மனசாட்சியை உறுத்துகிறதாம் - எகிப்தின் துணை ஜனாதிபதி ராஜினாமா

தலைநகர் கெய்ரோவில் ரப்பா-அல் அதாவியா மசூதி அருகிலும், நஹ்தா சதுக்கம் அருகிலும் அமைக்கப்பட்டிருந்த போராட்டக்காரர்களின் முகாம்களை பாதுகாப்பு படையினர் 'புல்டோசர்'களால் இடித்து அகற்றினர். 

இன்றைய துப்பாக்கிச் சூட்டில் மட்டும் 220 போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டதாகவும், 10 ஆயிரம் பேர் காயமடைந்ததாகவும் மோர்சியின் ஆதரவாளர்கள் கூறினர். 

அரசு தரப்போ., பலியானவர்களின் எண்ணிக்கையை 95 ஆகவும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கையை 758 ஆகவும் குறைத்து கூறியுள்ளது. 

இந்நிலையில், இன்றைய போராட்டத்தில் மக்கள் கொன்று குவிக்கப்பட்ட சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த எகிப்து துணை ஜனாதிபதி எல்பரேடி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

ஆட்சியாளர்களின் முடிவுகளுக்கு துணை போவதும், நான் ஏற்றுக்கொள்ள மறுத்த சம்பவங்களின் எதிர்விளைவுகளுக்கு துணை போவதும் மனசாட்சியை உறுத்துவதால் துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்கிறேன். 

எகிப்து தற்போது சந்தித்து வரும் சிக்கலை சீர்படுத்த அமைதியாக தீர்த்துக்கொள்ள பல்வேறு வழிகள் இருந்தும் தற்போது அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளில் தனக்கு உடன்பாடில்லை என்று இடைக்கால ஜனாதிபதி அட்லி மன்சூருக்கு அனுப்பியுள்ள ராஜினாமா கடிதத்தில் எல்பரேடி குறிப்பிட்டுள்ளார். 

சிறந்த கல்வியாளரான எல்பரேடி, கடந்த 2005ம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2 comments:

Powered by Blogger.