சாதனை படைத்த முஸ்லிம் மாணவர்கள் கௌரவிப்பு (படங்கள்)
இலங்கையில் தேசிய ரீதியில் பெருமை சேர்த்த பதுளை மாணவர்களுக்கு பாராட்டு நிகழ்வொன்று பதுளை, பதுளுபிட்டிய மஸ்ஜிதுல் முஜாயிடீன் பள்ளிவாசலில் பெருநாள் தினமன்று இடம்பெற்றது.
அகில இலங்கை ரீதியில் குர்ஆன் மனனம், ஆளில்லா விமானம் கண்டுபிடிப்பு போன்ற துறைகளில் சாதனை படைத்த பதுளையை சேர்ந்த மொஹமட் ஸாதுல்லாஹ் ஆபித் ருஷ்டி மற்றும் அல்ஹாபில் துவான் ரஷட் மொஹமட் யாசீர் ஆகியோரே இவ்வாறு பாராட்டப்பட்டவர்கள். அல்ஹாபில் துவான் ர;ட் மொஹமட் யாசீர் அகில இலங்கை ரீதியில் நடைப்பெற்ற குர்ஆன் மனனம் போட்டியில் 1வது இடத்தை பெற்றவரும், எகிப்பதில் நடைபெறவிருக்கும் குர்ஆன் மனன போட்டிக்கு தெரிவாகியிருப்பவரும் ஆவார்.
ஆபித் ருஷ்டி இவர் கடந்த காலத்தில் உயர்தர கணித பிரிவில் பதுளை மாவட்டத்தில் முதலாவது இடத்தையும், அகில இலங்கை ரீதியில் 8 வது இடத்தையும் பிடித்தவராவார். மொரட்டுவ, கடுபெத்த பல்கலைகழக பொறியியல் பீட மாணவரான ஆபித் தனது இறுதியாண்டு பரீட்சையில் செயற்றிட்டம் தயாரிப்பு செயற்பாட்டில் ஆளில்லா வானுர்தியை (UAV) – Unmanned Aenal Vehicle உருவாக்கிய குழுவில் பிரதிநிதித்துவம் செய்தவரும், கல்கலைகழக வளவில், முதன் முதலாக Auto Pilat System ூலம் ஆளில்லா விமானத்தை பரக்கவிட்டு சாதனை நிலைநாட்டியவரும் ஆவார். இவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு பெருநாள் தினத்தில் இடம்பெற்றதை படங்களில் காணலாம்


congratulation, well-done.
ReplyDelete