Header Ads



இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் கேள்வி

சேவைப் பிரமாணக் குறிப்பு தயாரிப்புக்கள் மற்றும் திருத்தங்கள்; தொடர்பான அரச நிர்வாகச் சுற்றறிக்கைக்கு ஏழு வருடங்கள் பூர்த்தி.திருத்தப்பட்ட ஆசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்பு எப்போது அமுலுக்கு வரும். இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் கேள்வி எழுப்புகிறது.

அரசாங்க சேவையில் உள்ள சேவைப் பிரமாணக் குறிப்புக்கள், ஆட்சேர்ப்பு நடை முறைகள் மற்றும் பதவியுயர்வுத் திட்டங்களைத் திருத்துதல் தொடர்பான அரச நிர் வாக அமைச்சின் 2006.04.25ஆம் திகதிய 6ஃ2006ஆம் இலக்கச் சுற்றறிக்கை வெளி யிடப்பட்டு எழு ஆண்டுகள் கடந்து விட்டது. இன்னும் அரசிற்கு ஆசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்பை வெளியிடும் எண்ணம் வரவில்லை.

இது அரச ஆதரவு தொழிற்சங்கங்களின் அச்சுறுத்தலால், அமைச்சின் சில உயர் அதிகாரிகளினாலும் அடிக்கடி மாறும் அமைச்சின் செயலாளரினாலும் ஆழம் அகலம் அறிய அவகாசம் தேவையென இழுத்தடிக்கப்பட்டுவர, அரசு இதனைச் சாதகமாகப் பயன்படுத்தி காலங் கடத்தி வருகின்றது. 

இதனால், தற்போது சேவையிலுள்ள 12.413 அதிபர்கள் மற்றும் 219.886; ஆசிரியர் களுக்கு 2008.07.01-2010.12.31 வரை 4.350 ரூபா முதல் 61.200 ரூபா வரையிலான சம்பள அதிகரிப்பு, நிலுவை நட்டமும்,2011.01.01-2013.12.31 வரை 5.220 ரூபா முதல் 73.440 ரூபா வரையிலான சம்பள அதிகரிப்பு, நிலுவை நட்டமும் ஏற்பட்டுள்ளது. இதனால், முன்னர் 400 கோடி ரூபாவும், பின்னர் 455கோடி ரூபாவும் அரசு ஏப்பம் விடும் நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த இழுத்தடிப்பின் ஊடாக, அதிபர், ஆசிரியர்களின் சம்பள உயர்வு தொடர்பில், 2008.06.30இல் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வழங்கிய தீர்ப்பு, 2008.07.15இல் ஆலாட்சி அதிகாரி வழங்கிய உத்தரவு, 2008.10.06இல் உச்ச நிதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, 2009.03.12இல் அரச சேவை ஆணைக்குழு வழங்கிய உத்தரவு, 2011 வரவு செலவுத்திட்டத்தில் ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதி என்பன கிடப்பிற்குப் போய்விட்டன. 

பல நூற்றுக்கணக்கான உயர் மட்ட மற்றும் தொழிற்சங்க சந்திப்புக்கள் நடாத்தி, கருத்துரைகள் பல பெற்றுத் தயாரிக்கப்பட்டு 1994.10.06இல் அமுல் செய்யப்பட்ட சேவையின் தற்போதைய பிரமாணக் குறிப்புக்கூட இன்னும் தீர்க்கப்படாத பல நூற் றுக்கணக்கான முரண்பாடுகளைக் கொண்டுள்ளது. இந்நிலையில் எவ்வாறு மூடிய அறையில், பல்வேறு வரையறைகளுக்கு மத்தியில் தொழிற்சங்கங்களின் கண்களுக் குப்பட்டுவிடாமல் தயாரிக்கப்பட்டு, பின்னர் திருத்தப்பட்ட, புதிய பிரமாணக் குறிப்பு, முரண்பாடுகளற்றதாய் இருக்கும் என்று எவ்வாறு எதிர்பார்க்க முடியும்.

ஆகவே, ஊர் இரெண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம். என்ற பழமொழிக் கொப்ப தொழிற்சங்கங்கள் செயற்படாமல், 2013.06.26இல் அரச சேவை ஆணைக் குழு அனுமதித்துள்ள புதிய ஆசிரியர் சேவைப் பிரமாணக்குறிப்பை ஏற்று, கிடைப் பதைப் பெற்றுக் கொண்டு, மேலும் பெற முயற்சிக்கும் வகையில் செயற்பட பிரதான தொழிற்சங்கங்கள் முன்வர வேண்டும் என்பது சங்கத்தின் மற்றுமொரு கோரிக்கையாகும்.

No comments

Powered by Blogger.