கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் தாக்குதல் - குற்றவாளிகளை தேடுகிறோமென நீதிமன்றத்தில் தெரிவிப்பு
(Tm) கொழும்பு, கிராண்ட்பாஸ், சுவர்ண சைத்திய வீதியிலுள்ள பள்ளிவாசலை சேதப்படுத்திய சந்தேகநபர்களை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்தனர்.
பள்ளிவாசலுக்கும் சூழவுள்ள சொத்துக்களுக்கும் ஏற்பட்ட சேதங்கள் பற்றி 45க்கும் மேற்பட்ட முறைப்பாடுகளை தாம் பெற்றுள்ளதாக நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தரமிட்டிபொல கூறியுள்ளார்.
மேற்படி கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் பிரதேசத்தில் கலகம் ஏற்பட்டவுடனேயே அப்பகுதியைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்ட போதிலும் தாக்குதல்களை நடத்தியவர்களை பொலிஸாரால் இனங்காண முடியவில்லை என்றும் அவர் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
.jpg)
மறைத்துவைத்துக்கொண்டு தேடினால் எப்படி கண்டுபிடிப்பது?
ReplyDelete