எந்தப் பௌத்தத்தை அரசாங்கம் ஆதரிக்கப் போகிறது..?
(கலாநிதி ஜெஹான் பெரேரா)
பௌத்த மத தேசிய வாதிகளின் பொங்கி எழுகை காலப் போக்கில் சற்றும் குறையாதே காணப்படுவதுடன் தொடர்ந்தும் வளர்ந்து செல்கின்றமைக்கு கொழும்பில் (கிராண்ட்பாஸ் ) உள்ள முஸ்லிம் பள்ளிவாசல் மீதான அண்மைத் தாக்குதல்கள் ஒரு அடையாளமாக உள்ளன.
தாக்குதல் ஏற்பட்டதனைத் தொடர்ந்து நிலைமைகளை பொலிஸார் கட்டுபாட்டுக்குக் கொண்டு வருவதில் காலதாமதம் ஏற்பட்டதுடன் வீண் சண்டைக்கு சென்றவர்களை கைது செய்வதிலும் அவர்கள் (பொலிஸார்) உறுதியுடன் செயற்படாமை காரணமாக அவ்வம்புக்காரர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பில் அரசாங்கத்தின் கொள்கை வித்தியாசமானதாகவே செல்வதாகவும் அடையாளம் காணக் கூடியதாக உள்ளது.
அரசாங்கத்தில் உள்ள ஆறு முஸ்லிம் அமைச்சர்களும் அரசாங்கத்திடம் பள்ளிவாசல் தாக்கப்பட்டமை தொடர்பாக உறுதியான நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதோடு எற்கனவே இடம்பெற்ற இவ்வாறான வன்முறைச் சம்பவங்களின் போது சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய சாரார் எதுவித பயனற்றதும் அக்கறையற்றதுமான நடவடிக்கைகளையே மேற்கொண்டுள்ளனர் என்றும் கூறியுள்ளனர்.
அண்மையில் கிராண்ட்பாஸ் மசூதி தாக்கப்பட்ட போது வன்முறைக் கும்பல்களாக தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ஒன்று கூடி அதன் மீது கற்களை வீசியும் கண்ணாடி ஜன்னல்களை நொறுக்கியும் பாழ்படுத்தியதுடன் அண்மையிலிருந்த முஸ்லிம் வீடுகளையும் தாக்கி நாசமாக்கியுள்ளனர். இத் தாக்குதல்களில் ஈடுபட்டவர்களை தெளிவாக அடையாளம் காணக் கூடியதாக இருந்த போதிலும் பொலிஸார் அக் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எதனையும் மேற்கொண்டு கைது செய்ய எதுவித முயற்சிகளையும் மேற்கொண்டதாக இதுவரையில் எதுவித அறிக்கைகளும் வெளிவரவில்லை.
அண்மைக் காலமாக இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்களின் பாங்குகளைக் கவனிக்கும் போது அவையாவும் நாட்டில் பன்மைவாதம், பல் கலாசாரம் , சமய சகிப்புத் தன்மை யாவற்றிற்கும் எதிரான அச்சுறுத்தல்களுக்கான அடையாளமாகவே தோன்றுகின்றன.
நாட்டின் யாப்பில் நாட்டு மக்கள் சுதந்திரமாக ஒன்று கூடவும் , சுதந்திரமான முறையில் சமயங்களை பின்பற்றவும் வழங்கப்பட்டுள்ள உத்தரவாதத்திற்கு ஊறுவிளைவிப்பதும் அவ்வுரிமைகளை மீறுவதுமே வீண் வம்புச் சண்டைக்கு செல்பவர்களது மனப்பான்மையாக உள்ளது. சட்டத்தை மீறியவர்கள் மீது எதுவித சட்ட ஒழுங்கு நடவடிக்கைகளும் எடுக்கப்படாது செயற்படும், சட்டத்தை அமுலாக்கம் செய்ய வேண்டியவர்களது இவ்வாறான சட்டத்தைப் பாதுகாக்காத மனப்பான்மை காரணமாக அரசாங்கம் சமய, மத சார்பாக ஒரு பக்க சார்பற்றதான பண்பினது என்னும் நம்பிக்கை மீது களங்கம் ஏற்படுகின்றது. இவ்வாறான அர்ப்பணிப்பற்ற நடவடிக்கைகளால் யுத்தம் முடிவுற்ற இலங்கையில் சமய மற்றும் இன ரீதியான பதற்றங்கள் தூண்டுவிக்கப்படுவன வாயுள்ளன.
பௌத்த மத தேசியத்துவ பிரிவினருக்கு அரசாங்கம் இந்தளவுக்கு (சட்டத்தை மீற) விட்டுக் கொடுப்பதற்கு அவர்கள் நாட்டில் பௌத்த மதத்தைப் பாதுகாப்பதாக தம்மை அடையாளம் காட்டிக் கொள்வதற்காக இருக்கு மானால் அது தவறானதாகும். ஏனெனில் இந் நாட்டில் பௌத்த மதத்தின் பொற்காலம் என புராதன காலப் பகுதியில் நிலவிய பௌத்த மதத்தின் சமய விரிவுரை விளக்க மூலத்திற்கு இவ்வாறான நடத்தைகள் முற்றிலும் நேர்மாறானதாகக் காணப்படுவதாகும். கலாசாரம் , விவகாரம் மற்றும் தேசிய மரபுரிமை அமைச்சினால் செய்யப்பட்ட சிங்கள மொழி பெயர்ப்பிலிருந்து செய்திகளைத் திரட்டி தொகுத்த சங்கசரண விலிருந்து இது பற்றித் தெரிந்து கொள்ள முடிகிறது.
"பௌத்த மதத்தை பின்பற்றுவோருக்கு வழிகாட்டும் நோக்கத்துடன் இலகுவில் விளங்கிக் கொள்ளக் கூடிய கதைகளை உள்ளடக்கியதான சங்க சரண என்னும் நூல் அநூராதபுர காலத்தில் பௌத்த பிக்குகளது வாழ்க்கை பற்றி ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் நிலவியமை பற்றி தெரிந்து கொள்வதற்கான சான்றாதாரமாகும். அது நிலையான ஒரு கொள்கையாக தொடர்ந்தும் “இன்னொருவருக்கு தீங்கிழைக்கும் எந்தச் செயலுமே ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல' என கூறியுள்ளது. அதில் குறிப்பிட்ட ஒரு கதையில் பிக்கு ஒருவருக்கு சுகவீனம் ஏற்பட்டது பற்றியும் அதற்காக அவருக்கு நோயிலிருந்து சுகமடைய ஒரு சிறப்பான நோய் தீர்க்கும் மருந்து தேவைப்பட்டது பற்றியும் கூறுகிறது.
இதற்காக உதவி செய்ய விரும்பிய ஒரு மர புனித ஆவி (tree spirit) ஒன்று அப்பாவியான ஒரு குழந்தையை நோய் வாய்ப்படச் செய்து அக் குழந்தை சுகப்படுத்த வேண்டுமானால் ஒரு சிறப்பம்சங்கள் கொண்ட மருந்தை தயாரித்து அதனை இந்தப் பிக்குவுக்கு கொடுக்க வேண்டும் என அக் குழந்தையின் பெற்றோரிடம் நிர்ப்பந்தித்திருக்கிறது. ஆனால் அவ்வாறு தயாரிக்கப்பட்ட அம் மருந்தை பிக்குவுக்குக் கொடுத்த போது அப்பிக்கு அம் மருந்தை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார். அந்த மர தெய்வம் அக் குடும்பத்தின் குழந்தையை நோயடையச் செய்து அக் குடும்பத்தின் மனவேதனையின் மீது தயாரிக்கப்பட்ட மருந்தைக் கண்ட பிக்கு "நண்பனே அந்த உணவு, மருந்து எமது பயன்பாட்டிற்கு ஏற்றதோ உகந்ததோ அல்ல.
இங்கிருந்து அதனை எடுத்துச் சென்று விடு' எனக் கூறியிருக்கிறார். இவ்வாறான கண்டிப்பானதும் , விதிவிலக்கிற்கு இடந்தராததுமான போதனைகளே சிங்கள , பௌத்த மக்களுக்கு கற்பிக்கப்பட்டிருக்கின்றன. இதனால் விளைவுகளை வழி முறைகளால் நியாயப்படுத்த முடியாது என்ற தத்துவம் பின்பற்றப்பட்டு வந்துள்ளது. வன்முறை கலசாரத்துடனான பௌத்த தேசியத்துவத்திற்கு அரசாங்கம் இப்போது விட்டுக் கொடுப்பதிலிருந்து மேற் கூறிய போதனை முற்றிலும் வேறானதாகும்.
மியன்மார் நாட்டில் பதவியிலிருக்கும் இராணுவ ஆட்சியாளர் எதிர்க் கட்சித் தலைவியான ஆங்சாங் சூகி என்பவருக்கு நாட்டில் அரசியல் செல்வாக்கு அதிகரித்து செல்வதனை பார்த்து அச்சம் கொண்டுள்ள நிலையில் ஆட்சியிலிருப்பவர்களில் ஒரு பிரிவினர் நாட்டின் பாதுகாப்புகக்காகவும் பௌத்த மதத்தை பாதுகாப்பதற்காகவும் என்று காரணங் காட்டி சிறுபான்மையினரான முஸ்லிம்களுக்கு எதிராக பெரும் வம்பு சண்டைகளுக்கு சென்று அவர்களை வன்முறையில் தாக்கி வருகின்றர்.
யுத்தத்திற்குப் பின்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள மேம்பாடுகள் பற்றி பொது நலவாய நாடுகளின் தலைவர்கள் ஒன்று கூடுகையில் எடுத்துக் கூறி அவர்களை இலங்கை மீது நல்லெண்ணம் கொள்ளவைப்பதில் விருப்பம் காட்டும் அதே நேரத்தில் இலங்கை அரசாங்கமானது மேற்கூறிய (மியன்மார் நிலைவரத்தை ஒத்த ) நிலைவரங்களையோ அல்லது வேறு எந்த வித எதிர்மறை நடவடிக்கைகளோ வளர விடாதும் அதேவேளையில் நவீன பௌத்த தேசியத்துவத்தினை பின்பற்றாது சங்கசரண வில் கூறப்படும் மரபு வழி வந்த பௌத்த பெறுமானங்களை கடைப்பிடித்து வர வேண்டும் . அதுவே நாட்டுக்கும் மக்களுக்கும் உகந்த தாயிருக்கும்.

கொச்சம் உலக அறிவும் தேவை அமெரிக்கா இஸ்ரேலினால் திட்டமிடப்பட்டு அழகாக அரங்கேறிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சித்திட்டம் இது 1924ம் அண்டுக்கு முன்னிருந்து திட்டமிடப்பட்டு உலகை ஒரு கிலாபாவின் கீழ் அமெரிக்கா ஆட்ச்சி செய்து கொண்டிருக்கின்றது அடுத்த ஆட்சி முஸ்லிம்களுடையது 100 ஆண்டுகளின் பின்னர் உலகைத்தின் கிலாப முஸலிம்களின் கைவசம் வரவேண்டும் என்ற அல்லாஹ்வின் ஒழுங்கு நெருங்கிய காலம் இது உங்களுக்கு கொஞ்சம் கம்மியாக விளங்கும் ஆனால் குர்ஆனை ஆராய்ச்சி செய்து விளங்கி வைத்திருக்கும் அந்த அல்லாஹ்வினால் சபிக்கப்பட்ட அந்தக் கூட்டம் விளித்திருக்கின்றான் ஆனால் நீங்கள் தூங்குகின்றீர்கள்
ReplyDeleteவிளித்துக்கொள்ளுங்கள் சுயநலத்திலிருந்து வெளியே வாருங்கள்