முன்னோடி வகுப்புத்தடை - இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் எதிர்க்கிறது
அதிகாரிகளின் தனிப்பட்ட சட்ட மீறல்களைத் தடுக்காது சாதாரண மாணவர்களின் தனிப்பட்ட கல்வி நடவடிக்கைகளுக்குத் தடைவிதிப்பதா என இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
தரம் ஐந்து புலமைப்பரிசில் வகுப்புக்கான முன்னோடி வகுப்புத்தடை தொடர்பில் பரீட்சைத் திணைக்களத்தின் அறிவிப்புத் தொடர்பில் இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் தலைவர் எம். அனஸ் கருத்துத் தெரவிக்கையிலே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்
தரம் ஐந்து புலமைப்பரிசில் வகுப்புக்கான முன்னோடி வகுப்புத்தடை,தரம்ஐந்து மாண வர்களின் முன்னேற்றத்திற்கு விதிக்கப்பட்ட தடையேயன்றி வேறில்லை. அதிகாரிகளின் தனிப்பட்ட சட்ட மீறல் தவறுகளைத் தடுக்க, சட்டத்தின் மூலம் சாதாரண மாணவர்களின் தனிப்பட்ட கல்வி நடவடிக்கைகளுக்குத் தடைவிதிப்பதா எனவும் அவர் கேள்வி எழுப்புகிறார்.
இலங்கையின் கல்வி வரலாற்றில், 1952முதல் அமுல் படுத்தப்பட்டுவரும் இந்தப் புல மைப் பரிசில் பரீட்சைத் திட்டம் 1977ஆம் ஆண்டின் 147ஆம் இலக்கச் சுற்றறிக்கை மூலம் மறுசீரமைக்;கப்பட்டதுடன், தற்போது 2006ஃ27 மற்றும் 2007ஃ04ஆம் இலக்கச் சுற்றறிக்கைகளின் விதிமுறைகளுக்கமைய வழங்கப்பட்டு வருகின்றது. இதற்கு இறுதி யாகச்செய்யப்பட்ட திருத்தத்தின்படி, குறித்த ஆண்டில் தரம் 5இல்கற்கும் அணைத்து மாணவர்களும் உள்ளீர்க்கப்பட்டுள்ளனர். அதன் அடிப்படையிலான பரீட்சை இம்முறை 25ஆம்; திகதி முதல் தடவையாக நடைபெறுகின்றது.
இதேவேளை, 1968 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க பகிரங்கப் பரீட்சைகள்; சட்டத்தின் 22 ஆவது பந்தியின் கீழ், கல்வி அமைச்;சருக்கு வழங்கப்பட்;டுள்ள அதிகாரத்தின்படி,
பரீட்சை நடைபெறுவதற்கு 5 தினங்களுக்கு முன் மேலதிக முன்னோடி வகுப்புக்கள், கருத்தரங்குகள், மீட்டல் வகுப்புக்;கள் எதுவும் நடாத்தப்படக் கூடாது. அதுபோன்று, பரீட்சையுடன் தொடர்புடைய மாதிரி வினாத்தாள்கள் தயாரித்தல், அச்சிடல், பகிர்ந்த ளித்தல், துண்டுப்பிரசுரங்கள் வெளியிடுதல், விளம்பரங்கள்செய்தல், சுவரொட்டிகள் மற் றும் பதாதைகளைக் காட்சிப்படுத்;துதல், மின்னஞ்சல் அனுப்புதல் அல்லது அவற்றை அருகில் வைத்திருத்தல் என்பன தண்டணைக்குரிய குற்றம் என ஜூலை 20ஆம் திகதிய வர்;த்தமானி மூலம்; அறிவித்துள்ளார்.
இப்பரீட்சை குறித்து, பிரபல நரம்பியல் வைத்திய நிபுணர் டாக்டர் அனுரத்த யாதெ னிய, தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்களில் அனேகர், அதி கரித்த தலைவலி மற்றும் மன அழுத்த உபாதைகளுக்கு உள்ளாகி வருவதாகவும், இப்பரீட்சையின் தேர்ச்சி பெற்றோர்களின் கௌரவப் பிரச்சினையாக உருவெடுத்துள்ள தெனவும், பெற்றோர்களும், பாடசாலை ஆசிரியர்களும், இந்தத் தேர்ச்சி தொடர்பில் செலுத்தும் அளவு கடந்த ஆதிக்கமே, இத்தகைய உபாதைகளுக்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில், அறிவு பூர்வமாகச் சிந்தித்து செயற்பட வேண்டியது பெற்றோர்கள், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் மீதான கட்டாயக் கடமை எனவும், இப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் இயல்பாகச் சிந்தித்து செயல்படும் நிலைக்கு வரவேண்டுமாயின், பாடசாலைகளிடையே போட்டி நிலைமையை உரு வாக்கி, சிலரின் பணம்பண்ணும் தொழிலாக உருவெடுத்துள்ள இப்பரீட்சையின் கட்ட மைப்பு மற்றும் நோக்கம் முதலானவை மாற்றம் பெறவேண்டியது அவசியம் எனவும் தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்தப் பரீட்சையின் அதிகரித்த சுமை காரணமாக மாணவன் ஒருவன்;, கடந்த வருடம் பரீட்சை தினத்தன்று பரீட்சை மண்;டபத்தில் பரீட்சை எழுதாது ஓய்வெடுத்;த வரலாறும் உண்டு.
இதேவேளை, இப்பரீட்சைக்கான பாடத்திட்டம் மறுசீரமைக்கப்பட்ட காலம் தொடக்கம், இப்பரீட்சையிலும், இதனை 8ஆம் தரத்திற்கு மாற்றுவது தொடர்பிலும் அதன் பாடத் திட்டத்திலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோசங்கள் அவ்வப்போது எழுப்பப்பட்டே வந்துள்ளது. இது உரியவர்களின் காதுகளுக்கு எட்டிய போதிலும் வரட்டுக் கௌரவத்தின் காரணமாகவும் விடாப்பிடியின் காரணமாகவும் அவை கண்டு கொள்ளப்;படாமல் போயின.
எவ்வாறாயினும், இது, வருமானங்களை மறைத்துக் காட்டும் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு தேர்சியையும், வசதியான பாடசாலைகளைப் பெற்றுக் கொடுப்பதற்காகவும் நடாத்தப்படும் பரீட்சையல்ல. மாறாக வருமானம் குறைந்த பெற்றோர்களின் திறமை மிக்க பிள்ளைகளுக்கு உரியதேர்ச்சியையும், அதன் மூலம் உரியகொடுப்பனவையும் பெற்றுக் கொடுப்பதற்குமாக நடாத்தப்படும் பரீட்சையாகும்.
வசதியான பெற்றோர்கள் தம் வீட்டில் மேலதிக கற்றல் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் இந்தத் தடைகளை மீறுவதனை எந்தச்சட்டத்தாலும் தடுக்க முடி யாது. ஆனால்; வசதி குறைந்த மாணவர்களுக்கான இலவச வகுப்புக்கள் இச்சட்டத் தின் மூலம் தடுக்கப்படுகின்றது. இது வறிய மாணவர்களுக்கு அரசு செய்யும் அநீதி யாகும். வினாத்தாள் வெளியாகாமல் இருப்பதற்காக மாணவர்களின் தனிப்பட்ட கல்வி நடவடிக்கைளுக்குத் தடைவிதித்து அவர்களது கல்வி முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பதை எவ்விதத்திலும் ஏற்றுக் கொள்ளமுடியாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
.jpg)
பிள்ளைகளின் எதிர்காலத்தின் மீதுள்ள நல்லெண்ணத்தினாலல்ல, ஒரு வாரத்துக்கு இயூசன் வரவு இவர்களுக்கு கிடைகாதே....அதுதான்!
ReplyDelete