ஓட்டமாவடியில் பெருநாள் விளையாட்டு விழா
நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஷிபாஉல் இஸ்லாம் கலை கலாசார சங்கத்தின் ஏற்பாட்டில் சிறுவர் பெருநாள் விளையாட்டு விழா ஓட்டமாவடியில் அமைந்துள்ள மன்னுஸ் ஸல்வா கோடை வாசஸ்தலத்தில் இதன் பொதுச் செயலாளர் மௌலவி ST.ஸலாஹூத்தீன் (சிறாஜி) தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அறிவிப்பாளர்களாக HM.பர்ஸான்,AL. நயீம்(பிறை FM),S.ஜனூஸ்(இலங்கை தேசிய ரூபாவாஹினி ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்)முபாறக் முகைதீன்(நேத்ரா ரூபாவாஹினி கூட்டுத்தாபனம்) ஆகியோர் பங்குபற்றியமை ஓர் விஷேட அம்சமாகும்.
இந்நிகழ்ச்யில் பங்குபற்றி வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கியதோடு போட்டியில் பங்குபற்றிய அனைத்து போட்டியாளர்களுக்கும் ஆறுதல் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Post a Comment