அக்குறணையில் ஈ தொல்லை - பிரதேச சபையிலும் எதிரொலித்தது
(JM.Hafeez)
அக்குறணைப் பிரதேச சபைப் பிரிவிலுள்ள குப்பைகளை கொம்போஸ்ட் பசளையாக மாற்றும் யாலுகஹவில என்ற இடத்தில் மரணிக்கும் பிணங்களின் முகங்களைக் கூட மூடிவைக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு பிரதேச மக்கள் உள்ளாகி இருப்பதாக பிரதேச சபையின் எதிர்கட்சி அங்கத்தவர் (ஐ.தே.க.) திஸ்ஸ டி அல்விஸ் குற்றம் சுமத்தினார்.
(13.8.2013) அக்குறணைப் பிரதேச சபையின் தலைவர் ஏ.எம்.எம்.சிம்சான் தலைமையில் இடம் பெற்ற மாதாந்தக் கூட்டத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,
அக்குறணைப் பிரதேச சபையின் குப்பைகளை கொம்போஸ்ட் ஆக மாற்றும் பிரதேசமான யாலுகஹவில என்ற இடத்தில் இடம் பெற்ற ஒரு மரண வீட்டிற்குச் சென்றேன். அப்போது அங்கு சவத்தின் முகத்தை மூடிவைத்திருந்தார்கள். இது நான் கண்ட ஒரு முதற் சந்தர்ப்பம். எனவே அருகில் இருந்த ஒருவரிடம் அது ஏன் எனக் கேட்டேன்.
அவர்கள் தந்த பதில் என்னைக் கவலை கொள்ளவைத்தது. அங்கு கட்டுப் படுத்த முடியாதுள்ள வீட்டு இழையான் (ஈ) தொல்லை காரணமாக அதனை மூடி வைத்துள்ளோம். சவத்தின் முகத்தில் மொய்த்துள்ள ஈக்கள் பின்னர் உணவுகளிலும் சிறுபிள்ளைளின் முகத்திலும் மூடுவதால் பலர் உபாதைக்குள்ளாகின்றனர். எனவேதான் அவ்வாறு செய்துள்ளோம் என்றனர். பெரிய நகரங்களிலும் இது காணப்படுகிறது. இருப்பினும் இதனைக் கைவிடவும் முடியாது. இதற்கென சபை பெருமளவு பணத்தை முதலீட செய்துள்ளது. வேறு ஒரு இடத்திற்கு எடுத்துச் செல்லவும் முடியாது. அக்குறணைப் பிரதேச சபை எல்லையில் பொருத்தமான இடம் எனக் கருதியே அவ்விடத்தில் இதை மேற்கொண்டோம். என்றார்.
இன்னும் பல அங்கத்தவர்கள் இது தொடாபாக கருத்து வெளியிட்டனர்.
இது தொடர்பாக சபைத் தலைவர் ஏ.எம்.எம். சிம்சான் தெவித்ததாவது,
இது ஒருபாரிய பிரச்சினை. இருப்பினும சபையதல் மேற்கொள்ள வேண்டிய சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம். இம்மாதம் மட்டு; நான்கு முறை வீட்டு ஈக்களைக் கட்டுப் படுத்த நான்கு முறைகள் மருந்து தெளித்தோம். ஆனால் அம் மருந்துகளுக்கு அல்லது இரசாயனக் கலவைக்கு இசைவாக்கம் அடைந்துள்ள ஈக்கள் மீண்டும் தலை தூக்க ஆரம்பித்து விட்டன. அதன் பிறகு மத்திய மாகாண மலேரியா ஒழிப்புப் பிரிவின் உதவியுடன் புதியதும், தாக்கு திறன் அதிகமானதுமான ஒரு கலவையைத் தெளித்ததன் பின் ஓரளவு கட்டுப் பாட்டில் வந்துள்ளது.
இருப்பினும் மழைகாலமாதால் அதன் தாக்கம் முற்றாக நீங்காது உள்ளது என்றார்.
.jpg)
Post a Comment