முஸ்லிம் சகோதரரின் இறைச்சிக்கடை மீது குண்டுத் தாக்குதல்
பானந்துறை - எலுவில்லயில் உள்ள முஸ்லிம் சகோதரர் ஒருவருடைய மாட்டிறைச்சி கடையின் மீது நேற்று இரவு (சனிக்கிழமை) பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும் இறைவனின் நாட்டப்படி குறித்த இறைச்சிக் கடைக்கு பெரியவில் சேதங்கள் ஏற்படவில்லை. அருகில் எரிபொருள் கடையொன்று இருந்துள்ளது. குறித்த கடைகளுக்கு பின் முஸ்லிம்களின் வீடுகளும் அமைந்துள்ளன. சேதங்கள் ஏற்பட்டிருப்பின் முஸ்லிம் வீடுகளுக்கும் சேதங்கள் ஏற்பட்டிருக்குமென சுட்டிக்காட்டப்படுகிறது.
முஸ்லிம் சகோதரரின் இறைச்சிக் கடைக்கு ஏற்கனவே அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த குண்டுத் தக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கலைவாதி கலீல் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு தெரிவித்தார்.
.jpg)
பிரச்சினைகள் மேலும் மேலும் வலுவடைந்துகொண்டு செல்கின்றன முதலில் கைகலப்பில் முஸ்லிம்கள் ஈடுபடவில்லையென்பதுவும் ஆயுதங்கள் கைக்குண்டுகள் பாவனை முஸ்லிம்களின் எதிர்ப்புறத்திலிரிருந்துதான் பலமுறை பாவிக்கப்பட்டுள்ளது என்பதுவும் முஸ்லிம்கள் இன்னும் பொருமையாகத்தான் இருக்கின்றார்கள் எனவே இனிமேலும் அரசாங்கம் பொறுமைகாக்காமல் தம் சுயனலத்திற்காக வாய்மூடி வேடிக்கைபார்க்காமல் உடனடி நடவடிக்கை எடுக்கத்தவறும் பட்சத்தில் நிலைமை மோசமடையபோவது ஊர்ஜிதம்.
ReplyDelete