Header Ads



பழைய பள்ளிவாசலா..? புதிய பள்ளிவாசலா..??

கிரேண்ட்பாஸில் பழைய பள்ளிவாசலுக்கு பௌத்தசிங்கள இனவாதிகளின் எதிர்ப்பு வெளியிட்டதன' காரணமாகவே புதிய பள்ளிவாசல் அமைக்கப்பட்டது. அந்த பள்ளிவாசல் மீதே தாக்குதலும் நடத்தப்பட்டது.

அத்துடன் புதிய பள்ளிவாசலே பௌத்தசாசன அமைச்சில் பதிவு செய்யப்பட்டும் உள்ளது. இதற்கான அனுமதியை பௌத்த சாசன அமைச்சும் வழங்கியுள்ளது.

இந்நிலையில் புதிய பள்ளிவாசலிலேயே தொடர்ந்து தொழுகைகள் நடாத்தப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. எனினும் அதற்கு பௌத்தசிங்கள இனவாதிகள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

பழைய  பள்ளிவாசலில் தொழுகை நடைபெற முஸ்லிம்கள் இணங்குவார்களாயின் அது மற்றுமொரு நெருக்கடியை அல்லது சட்டச் சிக்கலை முஸ்லிம்களுக்கு ஏற்படுத்துமென மேல் மாகாண சபை உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் கூறினார்.

No comments

Powered by Blogger.